அப்பா சொன்ன வார்த்தையை தட்டாமல் நிறைவேற்றிய உதயநிதி.. புதுக்கோட்டையில் அதிரடி!!
ஆய்வுகளின் வழியே வளர்ச்சியை சாத்தியமாக்க வேண்டும் என்ற நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்உத்தரவின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து புதுகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டோம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றுள்ள நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதுக்கோட்டையில் ஆய்வில் ஈடுபட்டார். புதுக்கோட்டையில் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 2017-18ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் 4.62 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு தற்போது பாதியில் நிற்கப்பட்டுள்ள பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களோடு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். மேலும் இதில் தமிழ்நாடு அமைச்சர்கள் ரகுபதி, பெரியகருப்பன், மெய்ய நாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம் எம் அப்துல்லா, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், ஆட்சியர் அருணா மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆய்வுகளின் வழியே வளர்ச்சியை சாத்தியமாக்க வேண்டும் என்ற நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்உத்தரவின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து புதுகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டோம்.
இதையும் படிங்க: தளபதிகளை களமிறக்கும் மு.க.ஸ்டாலின் - உதயநிதி கைக்கு போகும் முக்கிய பொறுப்பு...!
புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள், அவற்றின் கீழ் வரும் கிராம ஊராட்சி மன்றங்களில் நம் திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களின் நிலை குறித்துக் கேட்டறிந்தோம். கல்வி - சுகாதாரம் - வேளாண்மை - தொழிலாளர் நலன் - போக்குவரத்து வசதி என பல்வேறு துறைகள் சார்ந்து அதிகாரிகளின் விளக்கங்களை கேட்டுப் பெற்றோம். புதுக்கோட்டை மக்கள் மகிழும் வண்ணம் அரசுத்திட்டங்களை தொய்வின்றி கொண்டு சேர்த்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டோம்” என பதிவிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுகவில் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இடையே உரசல் இருப்பதாகவும், சீனியர் அமைச்சர்களை மதிக்காமல் உதயநிதி செயல்படுவது முதலமைச்சருக்கு பிடிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின. இதனை நிரூபிக்கும் வகையில் முதல்வரின் சில நிகழ்ச்சிகளில் உதயநிதி தலைகாட்டாமல் இருந்தது திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தியது. தற்போது உதயநிதி ஸ்டாலினின் இந்த பதிவு திமுக உடன்பிறப்புகளை சற்றே நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.
இதையும் படிங்க: கொட்டும் மழையிலும் உற்சாக வரவேற்பு... நெல்லையில் உள்ளம் குளிர்ந்த உதய்..!