அப்பா மு.க.ஸ்டாலின் துவங்கிய #MISA_Batch! அடுத்த Innings-ஐ ஆரம்பிக்கலாமா..!- உதயநிதி கேம் ஸ்டார்ட்!
தி.மு.க. இளைஞர் அணி இன்று 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் தொண்டர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய துணை அமைப்புகளில் ஒன்றான தி.மு.க. இளைஞர் அணி இன்று தனது 47-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி, இளைஞர் அணியின் மாநில செயலாளரும், தமிழக துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவு, தி.மு.க. தொண்டர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த பதிவில், “அடுத்த இன்னிங்ஸை ஆரம்பிக்கலாமா?” என்ற வரியுடன், “கழகம் நெருக்கடியில் இருந்த காலகட்டத்தில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான #MISA_Batch-ஐ கொண்டு தொடங்கப்பட்ட நம் தி.மு.க. இளைஞர் அணி இன்று 47-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
கொள்கைப் பணி மற்றும் மக்கள் பணிகளை காலத்திற்கும், களத்திற்கும் ஏற்ற வகையில் முன்னெடுக்க இளைஞர் அணியின் அடுத்த இன்னிங்ஸை தொடங்குவோம்” என்று குறிப்பிட்டுள்ளார். இதனுடன், இளைஞர் அணி உருவாக்கப்பட்ட வரலாற்றை நினைவுகூரும் காணொளியையும் அவர் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: திமுக கார்ப்பரேட் கம்பெனியாக மாறிவிட்டது! சாமானியர்களுக்கு இடமில்லை! கவுன்சிலர் பாபு குற்றச்சாட்டு!
கழகம் நெருக்கடியில் இருந்த நேரத்தில், கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான #MISA_Batch-ஐ கொண்டு தொடங்கப்பட்ட நம் @dmk_youthwing , இன்றைக்கு 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
— Udhay (@Udhaystalin) July 20, 2026
கொள்கைப் பணி-மக்கள் பணிகளைக் களத்திற்கும் காலத்திற்கும் ஏற்றார்ப் போல் முன்னெடுக்கக்… pic.twitter.com/W4aRR7yr6T
தி.மு.க. இளைஞர் அணி 1980-ம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற விழாவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. அதன் முதல் மாநில அமைப்பாளராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று, பல ஆண்டுகள் இளைஞர் அணியை வழிநடத்தினார். அவரது தலைமையில் இளைஞர் அணி, கட்சியின் வலுவான அமைப்பாக வளர்ந்ததாக தி.மு.க. நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
2019-ம் ஆண்டு ஜூலை 4 முதல் உதயநிதி ஸ்டாலின் மாநில செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு, உறுப்பினர் சேர்க்கை இயக்கங்கள், நீர்நிலைகள் தூர்வாருதல், சமூக நலப் பணிகள், இளைஞர்களை அரசியல் மற்றும் பொதுப்பணிகளில் ஈடுபடுத்தும் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், இல்லந்தோறும் இளைஞர் அணிகளை உருவாக்குதல் மற்றும் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
47-வது ஆண்டு தொடக்க நாளில் வெளியிடப்பட்ட உதயநிதி ஸ்டாலினின் இந்த பதிவு, தி.மு.க. இளைஞர் அணியின் அடுத்தகட்ட செயல்பாடுகளுக்கான அரசியல் சைகையாகவும், தொண்டர்களை மீண்டும் களப்பணிக்கு தயார்படுத்தும் அழைப்பாகவும் அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது. சமூக வலைதளங்களிலும் #MISA_Batch மற்றும் “Next Innings” என்ற வாசகங்கள் பலரது கவனத்தை ஈர்த்து பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: பட்டம் வாங்கும் இன்பநிதி! லண்டன் பறந்த உதயநிதி! மு.க.ஸ்டாலின் குடும்பமாக பயணம்!