×
 

“தவெக அரசு ஒருபோதும் வேடிக்கை பார்க்காது...” - மத்திய பாஜகவுக்கு பகீர் கிளப்பிய வன்னியரசு...!

மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வன உரிமைச் சட்டத்தை தமிழ்நாடு அரசு ஒருபோதும் வேடிக்கை பார்க்காது என கல்வராயன் மலையில் நடைபெற்ற கோடை விழாவில் சமூக நீதி துறை அமைச்சர் வன்னியரசு பேச்சு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அருகே உள்ள கரியாலூர் கோடை விழா அரங்கில் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா தலைமையில் கோடை விழா விமர்சையாக நடைபெற்றது... இதில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு மற்றும் வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் ஆகியோர் கலந்து கொண்டு அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டிருந்த 45 அரங்குகளை திறந்து வைத்து அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பார்வையிட்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் 6555 பயனாளிகளுக்கு சுமார் 9 கோடியே 13 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் வன்னியரசு சிறப்புரையாற்றுகையில் வன உரிமை சட்டம் என்பது ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ளது.

அந்தச் சட்டத்தின் மூலமாக மலைப்பகுதிகளில் பழங்குடியின மக்களாக நீண்ட காலமாக வசிப்பவர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள், பூர்வ குடிகள், அவர்களை அப்புறப்படுத்த கூடிய மிக மோசமான சதியை ஒன்றிய பாஜக அரசு செய்ய முனைந்திருக்கிறது அதை ஒருபோதும் தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்க்காது பழங்குடியின மக்களுக்கான அரசுதான் தமிழக வெற்றிக்கழகம் தலைமையிலான அரசு அவர்களை பாதுகாக்கின்ற அரசு தான் தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அரசு என்றும் கள்ளக்குறிச்சியை நல்ல குறிச்சியாக அனைவரும் ஒன்றிணைந்து மாற்றுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழகத்தை உலுக்கிய கவின் கொலை... ஓராண்டு நினைவு நாள்.. கவின் குடும்பத்தை சந்தித்த அமைச்சர் வன்னியரசு..!

தொடர்ந்து பல்வேறு அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு பேச்சாளர்களின் சொற்பொழிவுகள் உள்ளிட்ட பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் கல்வராயன்மலை மட்டுமின்றி பொதுமக்கள் ஆர்வமுடன் இந்த கோடை விழாவில் பங்கேற்றனர்....

இதையும் படிங்க: தவெக கூட்டணியில் பாமக இணைவா?... அன்புமணி பெயரைச் சொல்லி வன்னியரசு கொடுத்த பதிலடி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share