“எலே நீங்கலாம் நிர்வாகிகளாலே...” - திருமா முன்னிலையிலேயே சரமாரியாக தாக்கிக் கொண்ட விசிகவினர்...!
திருச்செந்தூரில் திருமாவளவன் முன்னிலையில் விசிகவினர் மோதல். அம்பேத்கர் சிலை விவகாரத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு.
திருச்செந்தூரில், அம்பேத்கர் சிலை அமைத்தது தொடர்பான விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த இரு தரப்பினர், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் முன்னிலையிலேயே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை அமைப்பது தொடர்பாக அக்கட்சியினர் இரு தரப்பாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த நான்கு ஆண்டுகளாக இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடும், மோதலும் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், திருச்செந்தூரில் நடைபெற்ற அம்பேத்கர் படிப்பக திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வருகை தந்தார். தொடர்ந்து, அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ள வளாகத்தையும் அவர் பார்வையிட்டார்.
இதையும் படிங்க: “அடுத்த ஆளுங்கட்சி நம்ம தான்...” திமுக, அதிமுக, தவெகவுக்கு ஒரே நேரத்தில் இடியை இறக்கிய திருமா...!
அப்போது, சிலை அமைப்பு தொடர்பாக இரு தரப்பினரிடையே நிலவி வரும் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், இரு தரப்பினரையும் அழைத்து திருமாவளவன் சமாதானப்படுத்த முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது இரு தரப்பினரும் திருமாவளவன் முன்னிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு மோதலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் மோதலில் ஈடுபட்டவர்களை பிடித்து சமாதானப்படுத்தினர். இதையடுத்து, திருமாவளவன் அங்கிருந்து உடனடியாக புறப்பட்டுச் சென்றார்.
அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்ட விவகாரத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக இரு தரப்பினரிடையே பிரச்னை நீடித்து வரும் நிலையில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் முன்னிலையிலேயே இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் திருச்செந்தூரில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மோசமாக நடந்துகொண்டனர்! திருமாவளவனை தொடர்ந்து துரை வைகோ! திமுகவை குறிவைத்து அடுத்த அதிரடி பேச்சு!