×
 

கமல் ஹாசன் செய்த தியாகம்... திமுக கூட்டணியில் இருந்து முதல் ஆளாக திருமா சொன்ன வார்த்தை...!

கமல் ஹாசனின் முடிவை திமுக கூட்டணியில் இருந்து முதல் ஆளாக திருமாவளவன் வரவேற்றுள்ளார்.

வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என்றும் நிபந்தனையற்ற ஆதரவு திமுகவிற்கு அளிக்கப்படும் என்றும் கமல்ஹாசன் அறிவித்த நிலையில், அவர் செய்தது தியாகம் எனவும், கமல்ஹாசனுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை எனவும் முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார். 

இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பில் கூட கமல் ஹாசன், “எனக்கு அரசியல் தொழில் அல்ல. கடமை. அப்படித்தான் எல்லோரும் இருக்க வேண்டும். எந்த தலைவர் இப்படி செய்தார் என்று நான் சவால் எல்லாம் விட மாட்டேன். கேட்க மாட்டேன். நான் செய்து இருக்கிறேன். இந்த முயற்சி ஆட்சி தொடர வேண்டும் என நினைப்பது குடிமகனின் கடமை. எனவே ஒரு கட்சியின் தலைவனாக இந்த முயற்சியை எடுத்திருக்கிறேன்” எனக்குறிப்பிட்டிருந்தார். 

கமல் ஹாசனின் முடிவை திமுக கூட்டணியில் இருந்து முதல் ஆளாக திருமாவளவன் வரவேற்றுள்ளார். இதுகுறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ... " நெருக்கடியான சூழலில் 'எங்கே எங்கள் பங்கு' என்று கேட்பது ஒரு நல்ல சகோதரனின் அடையாளமாக இருக்கமுடியாது. இது தியாகம் அல்ல; கடமை. " ...

இதையும் படிங்க: பானை சின்னத்தில் தான் போட்டி..! 8 தொகுதிகளுக்கு உடன்பட்டது ஏன்? திருமா. பளீச் விளக்கம்..!!

மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனரும் தலைவருமான அண்ணன் கமல் ஹாசன் அவர்களின் இந்த அதீத உணர்வு, மிகவும் ஆழமான, தொலைநோக்குப் பார்வையுள்ள அரசியல் புரிதலின் வெளிப்பாடாகும்.

நட்புறவில் சிறு கீறலும் ஏற்படாமல் நனிநாகரிகத்தோடு தனது கையறுநிலையை தெளிவுபடுத்தியுள்ள பாங்கு, அவரது அறிவுமுதிர்ச்சியையும் அதியுச்சப் பக்குவத்தையும் உறுதிப்படுத்துகிறது. 

திமுக தலைமையிலான 'மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் ' வெற்றியை மட்டுமே கருத்தில் கொண்டு, துணிச்சலாக அவர் மேற்கொண்டுள்ள இந்த முடிவு அரசியல் வரலாற்றில் என்றென்றும் நிலைபெறக்கூடிய ஒன்றாகும். 

அரசியல் ஆதாயத்திற்காகவோவ்தான்தோன்றித் தனமாகவோ உணர்ச்சிவயப்பட்டுத் தாறுமாறாக வெடித்துச் சிதறாமல், 'நாங்கள் போட்டியிட விரும்பவில்லை' என்றும்; திமுக.தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்குத் தீவிரமாகப் பணியாற்றுவோம்" என்றும்; அண்ணன் கமல்ஹாசன் அவர்கள் எடுத்துள்ள இந்த நிலைப்பாடு காலத்தால் போற்றப்படும் அரசியல் கண்ணியம் ஆகும். 

அவர்மீது மக்களிடையே நிலவும் அதியுயர் நன்மதிப்பு பன்மடங்கு பல்கிப் பெருகும்! மாண்புநிறை அண்ணனுக்கு மனம்நிறைந்த பாராட்டுகள்! என பதிவிட்டுள்ளார். 

இதையும் படிங்க: விவசாயி படுகொலை... மகள் தற்கொலை..! வாயை திறங்க திருமா..!! விளாசிய EPS..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share