பசும்பொன்னில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்... தேவர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை..!
அங்குள்ள முத்துராமலிங்க நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கதேவர் 118வது ஜெயந்தி விழா, 62வது குருபூஜை விழா அக்.,28 முதல் கொண்டாடப்படுகிறது. தமிழகத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக வந்துள்ள துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், இன்று பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
இதற்காக நேற்று மாலை கோவையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்த சி.பி.ராதாகிருஷ்ணன், மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மதுரை அரசினர் விருந்தினர் மாளிகையில் இரவு ஓய்வெடுத்தார்.
தொடர்ந்து இன்று காலை விடுதியில் இருந்து மதுரை விமான நிலையம் சென்ற துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், ஹெலிகாப்டர் மூலம் பசும்பொன் சென்றடைந்தார். அங்குள்ள முத்துராமலிங்க நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க: கலைஞரை ”ஆஹா.. ஓஹோ...” என புகழ்ந்து தள்ளிய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்... செம குஷியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!
முதலமைச்சர், துணை ஜனாதிபதி உள்ளிட்டோரின் வருகையை முன்னிட்டு இன்று பசும்பொன்னில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் 38 இடங்களில் செக்போஸ்ட் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பசும்பொன்னில் மட்டும் 350 CCTTV கேமராக்கள், மாவட்டம் முழுவதும் உள்ள தாய் கிராமங்களில் நான்காயிரம் சிசிடிவி கேமராக்கள் மூலம் பாதுகாப்பு பணி நடைபெற்று வருகின்றன. வாடகை வாகனங்களில் பொதுமக்கள் வரக்கூடாது, சொந்த வாகனங்களில் மட்டும் வர வேண்டும், வாடகை வாகனங்களில் வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும், இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை போன்ற கட்டுப்பாடுகள் காவல்துறையால் விதிக்கப்பட்டுளனர்.
விதிமீறலில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க 38 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சிறப்பு பஸ்களில் பாதுகாப்பு பணிக்காக 2 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். பயணம் செய்பவர்களின் நடவடிக்கையை கண்காணிக்க உடையில் அணிந்து கொள்ளும் 300 பிரத்யேக கேமராக்கள் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: முதன்முறையாக... குடியரசு துணைத் தலைவராக தமிழகம் வந்த C.P. ராதாகிருஷ்ணன்..! உற்சாக வரவேற்பு...!