தவெக தலைவர் விஜயை முடக்க மாஸ்டர் பிளான்... வேண்டுமென்றே விவாகரத்து மனுவை கசிய விட்டது இவரா?... வெளியானது ஷாக்கிங் உண்மை...!
தவெக தலைவர் விஜயின் மனைவி சங்கீதா தொடர்ந்த விவாகரத்து வழக்கின் மனு பொதுவெளியில் கசிந்தது எப்படி? என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு செங்கல்பட்டு மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி பதில்
கடந்த மாதம் முதல் சங்கீதா விஜய் விவகாரத்து மனு பொதுவெளியில் கசிந்து பேசுபொருளாகியது. சட்டப்படி குடும்பநல நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகள். மிகவும் பாதுகாப்பாக மனுதாரார் எதிர்மனுதரர் தரப்பு விவரங்கள் பாதுகாப்பாக மறைக்கப்பட்டு இருக்கும். இணையதளத்தில் கூட மனுதாரரின் எதிர்மனுதாரர் பெயர் விவரங்கள் மறைக்கப்பட்டு தான் இருக்கும். இப்படி இருக்கையில். மனுதாரரின் மொத்த மனுவும் தொடர்ச்சியாக குறிப்பிட்ட சில தேதிகளில் பொதுவெளியில் கசிந்தது எப்படி என்று அனைவரும் குழம்பி போய் இருந்தனர்.
இது தொடர்பாக கடந்த மார்ச் 8ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் ஆதித்ய சோழன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் அறியும் உரிமை சட்ட மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனு உடனடியாக செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. அதற்கு செங்கல்பட்டு மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி சந்திரசேகரன் 17.03.2026 அன்று பதில் அளித்து உள்ளார்.
அதில் மனு பொது வெளியில் கசிந்தது தொடர்பாக எதாவது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதா என்று கேள்விக்கு. - நீதிபதி இல்லை எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று பதில் அளித்து உள்ளார். மனுதாரர் in camera proceeding கேட்டுள்ளார் இருந்த பொழுதும் மனு கசிந்து உள்ளது. இதற்கு மனுதாரர் தரப்பில் இருந்து ஏதாவது புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளதா என்று கேள்விக்கு. மனுதாரர் தரப்பு நடவடிக்கை கோரி எந்த புகாரும் கொடுக்கவில்லை என்று நீதிபதி பதில் அளித்து உள்ளார்..
இதையும் படிங்க: "அப்படி என்ன தான் இருக்கு...” - ஜனநாயகனுக்காக கொந்தளித்த அமீர்... சென்சார் போர்டுக்கு சரமாரி கேள்வி...!
விவகாரத்து மனு கசிந்தது தொடர்பாக நீதிமன்றம் ஏதாவது தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளதா? என்ற கேள்விக்கு. - நீதிமன்றம் தானாக முன்வந்து எந்த வழக்கும் பதியவில்லை என்று பதில் அளித்து உள்ளார்..
மனு நீதிமன்ற வளாகத்தில் இருந்து கசிந்து இருந்தால் மனுவில் நீதிமன்ற முத்திரை இருந்து இருக்கும். கசிந்த மனுவில் அவ்வாறு நீதிமன்ற முத்திரை எதுவும் இல்லை. வேறு யாராவது வெளியிட்டு இருந்தால் கண்டிப்பாக அது சட்டப்படி குற்றம் எனவும், உடனடியாக மனுதாரர் தரப்பு புகார் தெரிவித்து இருக்க வேண்டும் எனவும் அப்படி ஏதும் புகார் செய்யவில்லை என்பதும் உறுதியாகிவிட்டதாகவும் சங்கீதா தரப்பில் இருந்து தான் மனு வெளியாகி உள்ளதாக ஆதித்ய சோழன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விஜய் உடன் கூட்டணியா?... டெல்லியில் வைத்து இறுதி முடிவை அறிவித்த இபிஎஸ்... அதிரும் அரசியல் களம்...!