ஹெலிகாப்டரில் என்ட்ரி! ஒன் லாஸ்ட் பிரசாரம்!! தாராபுரத்தில் ரோடு ஷோவை துவங்கினார் முதலமைச்சர் விஜய்!
சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்ற விஜய், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தாராபுரம் மாருதி நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடுக்கு சென்றடைந்தார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது. இதையொட்டி த.வெ.க. வேட்பாளர் சத்யபாமாவுக்கு ஆதரவாக கட்சித் தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் இன்று தாராபுரத்தில் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.
ஏற்கனவே தாராபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டிருந்த விஜய், தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் மீண்டும் தொகுதிக்கு வந்துள்ளார். இன்று நடைபெறும் பிரசாரத்தில் வாகனத்தில் சென்று பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கிறார்.
இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்ற விஜய், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தாராபுரம் மாருதி நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடுக்கு சென்றடைந்தார்.
இதையும் படிங்க: அடுத்த இடைத்தேர்தலில் திமுக, அதிமுக இருக்காது! தாராபுரத்தில் விஜய் வெற்றி செங்கோட்டையன் கணிப்பு!
அங்கிருந்து தனது வாகனப் பிரசாரத்தை தொடங்கினார். ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படுவது, இறுதிக்கட்ட பிரசாரத்துக்கான பயண நேரத்தை குறைக்கும் வகையில் திட்டமிடப்பட்டதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மாருதி நகரில் தொடங்கும் இந்த வாகனப் பிரசாரம், உடுமலைப்பேட்டை சாலை சந்திப்பு, காவல் நிலைய சந்திப்பு, ஐந்து சாலை சந்திப்பு, மீனாட்சிபுரம், குளத்துப்பாளையம், கரையூர், மூலனூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக நடைபெறுகிறது. பின்னர் வஞ்சியம்மன் கோவில் பகுதியை சென்றடையும் வகையில் வழித்தடம் திட்டமிடப்பட்டுள்ளது.
த.வெ.க. வெளியிட்ட தகவலின்படி, விஜய்யின் இந்த இறுதிக்கட்ட வாகனப் பிரசாரம் சுமார் 114 கி.மீ. தொலைவுக்கு பல்வேறு இடங்களை உள்ளடக்கியதாக திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு போலீசாரும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
பிரசாரத்துக்குப் பிறகு விஜய் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் கோவை சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிவடைவதால், தாராபுரத்தில் விஜய்யின் இந்த ரோடு ஷோ தேர்தல் களத்தின் இறுதிநாள் பரபரப்பை அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!