ஆட்சியே வேண்டாம்! யார் காலிலும் விழ தயாராக இல்லை! மீண்டும் மக்களிடமே போவேன்!! வெகுண்டெழுந்த விஜய்!!
'ஆட்சியே வேண்டாம்; யாருக்கும் அடிமையாக இருக்க நான் விரும்பவில்லை. பதவிக்காக எவர் காலிலும் விழ தயாரில்லை. மீண்டும் மக்களிடமே போவேன்' என விஜய் உரத்த குரலில் சொன்னதாக, தவெக வட்டாரங்கள் தெரிவித்தன.
சென்னை: தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் முயற்சிகள் இழுபறியாக நீடிப்பதால் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.,) தலைவர் விஜய் தீவிர விரக்தியில் இருப்பதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
“ஆட்சியே வேண்டாம். யாருக்கும் அடிமையாக இருக்க நான் விரும்பவில்லை. பதவிக்காக எவரது காலிலும் விழத் தயாரில்லை. மீண்டும் மக்களிடமே செல்கிறேன்” என விஜய் உரத்த குரலில் கூறியதாக த.வெ.க., வட்டாரங்கள் தெரிவித்தன. மெஜாரிட்டி கிடைக்கும் என நம்பிய அவர், சில இடங்கள் குறைந்து போனதால் ஏமாற்றம் அடைந்துள்ளார்.
“என்னைப் போல ஜாதி, மதம், ஊழலுக்கு எதிரான சிறு கட்சிகள் ஆதரவு தரும் என எதிர்பார்த்தேன். கம்யூனிஸ்ட் கட்சிகள் பதவி எதிர்பார்க்காமல் ஆதரவு தெரிவித்தன. ஆனால், திருமாவளவன் ஆதரவு தருவதாக வாக்களித்துவிட்டு, நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளை விதிக்கிறார். ஸ்டாலின் ஆலோசனையுடன் செயல்படுகிறார்” என விஜய் வருத்தத்துடன் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மீண்டும் சினிமா! பூஜை போட தயாரான தவெக தலைவர் விஜய்! ஜனநாயகன் கசிந்ததால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட முடிவு!!
மேலும், “அரசியல் பற்றி எனக்கும் தெரியும். ஆனால் மக்களின் தீர்ப்புக்கு எதிராக இப்படி அனைவரும் அணி திரள்வார்கள் என எதிர்பார்க்கவில்லை” என ஆதங்கத்தை வெளியிட்டார். “ஆட்சி அமைப்பதற்கு முன்பே ஆயிரம் நிபந்தனைகள் விதிப்பவர்கள், பதவியேற்ற பிறகு என்ன செய்வார்கள் என நினைக்கும்போது பயமாக இருக்கிறது. அப்படியான ஆட்சியை அமைக்க வேண்டுமா? ராஜினாமா செய்துவிட்டு மக்களிடம் சென்று முழு ஆதரவு கேட்டால் மறுக்க மாட்டார்கள்” என விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதைக் கேட்ட அவரது ஆலோசகர்கள் அதிர்ச்சியடைந்து, அவசர முடிவு எடுக்க வேண்டாம் எனக் கெஞ்சியுள்ளனர். “சுப்ரீம் கோர்ட் நம்மை கைவிடாது. மற்ற கட்சிகளில் மனசாட்சி உள்ளவர்கள் ஆதரவு தருவார்கள்” என ஒருவர் சொன்னார். மற்றொருவர், “ஒன்றே முக்கால் கோடி மக்களின் ஓட்டுகளை வீணாக்கக் கூடாது” என எச்சரித்தார். எதிர்க்கட்சித் தலைவராக அமரலாம் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டது.
தற்போது விஜய் மவுனம் சாதிப்பதால் த.வெ.க.,வில் பதற்றம் அதிகரித்துள்ளது. மக்களின் தீர்ப்பை மதிக்காமல் அரசியல் சதி நடைபெறுவதாக அவர் உணர்வதாகக் கூறப்படுகிறது. இந்த நிலை தமிழக அரசியலை மேலும் சிக்கலாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இணையத்தில் லீக்கான ஜனநாயகன்! தொண்டர்கள் அதிர்ச்சி! விஜய்க்கு சாதகமா? பாதகமா?