×
 

பழி வாங்கணுமா? பனையூருக்கு வரட்டா? விஜய்க்கு சவால் விட்ட ஜூலி..!!

பழிவாங்க வேண்டுமா? பனையூருக்கு வரட்டுமா என விஜய்க்கு ஜூலி சவால் விட்டு உள்ளார்.

வேலூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடந்த கூட்டத்தில் விஜய் பங்கேற்று பேசினார். அந்த பேச்சு முழுவதும் ஆவேசமாகவும், உணர்ச்சிகரமாகவும் இருந்தது. குட்டிக்கதை ஒன்றைச் சொல்லி தொடங்கி, பின்னர் கண் கலங்கும் அளவுக்கு தமிழக அரசியல், மக்களின் பிரச்சினைகள், எதிர்காலத் திட்டங்கள் என பலவற்றைத் தொட்டுப் பேசினார். குறிப்பாக ஜல்லிக்கட்டு போராட்டத்தை தமிழக அரசியல் களத்துடன் ஒப்பிட்டு ஒரு குட்டிக் கதை சொன்னார்.

ஜல்லிக்கட்டு காளை போல தைரியமாக, வீரமாக நின்று போராட வேண்டும் என்ற பாணியில் அந்தக் கதையை வைத்து தனது பேச்சை வலுப்படுத்தினார்.இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. பலரும் பாராட்டினாலும், சிலர் விமர்சனங்களையும் எழுப்பினர். அப்படி ஒரு விமர்சனம் வந்தது பிக் பாஸ் புகழ் ஜல்லிக்கட்டு ஜூலியிடமிருந்து. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான ஜூலி, விஜயின் அந்த ஜல்லிக்கட்டு குட்டிக் கதையை கேட்டு மிகுந்த ஆதங்கம் அடைந்ததாகக் கூறி ஒரு வீடியோ வெளியிட்டார்.

அந்த வீடியோவில் ஜூலி, “ஹாய் அண்ணா, நான் ஜூலி. இப்போதான் உங்க வேலூர் பரப்புரை பார்த்தேன். வழக்கம்போல இதிலும் ஒண்ணும் இல்லைன்னு வச்சுக்கலாம். நீங்க ஜல்லிக்கட்டு காளை பத்தி ஒரு குட்டி ஸ்டோரி சொன்னீங்க. அதை கேட்டு என்னால் அமைதியா இருக்க முடியல” என்று தொடங்கினார். ஜல்லிக்கட்டு போராட்டத்தை மக்கள் கஷ்டப்பட்டு, உயிர் கொடுத்து, பல போராட்டங்கள் நடத்தி பெற்ற சாதனை என்று சொல்லி, அதை அரசியலில் தவறாக ஒப்பிட்டு பேசினால் தவறு என்று விமர்சித்தார். “ஐம்பது பேர் போய் ஏதாவது ஆகிடுச்சுன்னா, திரும்பி போராட யாருக்கும் திராணி இருக்காது. 50-ஐ 500 ஆக்காதீங்க” என்று எச்சரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: “யார் பெருசுன்னு அடிச்சிக்காட்டு”... விஜய்  ‘சைலண்ட்’ மூவ் Vs எடப்பாடி ‘வயலண்ட்’ அட்டாக்... ஒரு அலசல்...!!

ஜல்லிக்கட்டு இப்போது சரியாக நடக்கிறது, அதைப் புல்லுக்கு காட்டி ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது என்று கேள்வி எழுப்பினார். இந்த வீடியோ வெளியான உடனேயே சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் ரசிகர்கள் கடுமையாக ஜூலியை விமர்சித்தனர். இதனால் ஜூலி மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் விஜய் ஸ்டைலிலேயே பேசி, நான் வீட்ல இருப்பேன் இல்லனா ஆபீஸ்ல இருப்பேன்... பனையூர் வரட்டுமா? என்று கிண்டலடித்தார். தன்னை பழிவாங்க வேண்டுமானால் நேரடியாக வந்து மோதுங்கள், ரசிகர்களை வைத்து செய்யாதீர்கள் என்று சவால் விட்டார்.

இதையும் படிங்க: “அடக்கி வாசிங்க தம்பி... அந்த விஷயத்துல அல்டிமேட் நாங்க தான்”... ஒற்றை வார்த்தையில் விஜய் ஜோலியை முடித்த வானதி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share