×
 

நாளை காஞ்சிபுரத்தில் களமிறங்கும் விஜய்... வீடு, வீடாக சென்று புஸ்ஸி ஆனந்த் செய்த காரியம்...! 

விஜய் மக்கள் சந்திப்பிற்கு வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு அனுமதி அட்டையை அக்கட்சியின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த் வழங்கினார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டபோது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதன் பிறகு பொது நிகழ்வுகளில் விஜய் பங்கேற்காமலே இருந்து வந்தார். இதனிடையே கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுடைய குடும்பத்தினரை சென்னைக்கே அழைத்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து சோகத்தில் இருப்பதாக கூறிய விஜய் கொஞ்சம் கொஞ்சமாக கட்சி பணிகளை மேற்கொண்டு வந்தார். அதையடுத்து தற்போது மீண்டும் மக்கள் சந்திக்க ஆயத்தமாகி இருக்கிறார்.

இந்நிலையில் தான் சேலத்திலிருந்து டிசம்பர் நான்காம் தேதி முதல் மீண்டும் பிரச்சாரத்தை தொடங்க விஜய் முடிவு செய்திருந்தார். ஆனால் திருவண்ணாமலை கார்த்திகை திருவிழா உள்ளிட்ட சில பாதுகாப்பு காரணங்களால் வேறொரு தேதியில் பிரச்சாரத்தை வைத்துக்கொள்ள போலீசார் அறிவித்திருந்தனர். இதற்கிடையே நாளை காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில பொதுமக்களை சந்திக்க விஜய் திட்டமிட்டுருக்கிறார். 

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள  ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் அம்மாவட்டத்தைச் சேர்ந்த  மக்களை சந்திக்கவுள்ளார். இந்நிகழ்ச்சி உள்ளரங்கு நிகழ்ச்சி என்பதால் சுமார் 2000 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதையும் படிங்க: ”என் தம்பி விஜய் அதுக்கு எல்லாம் சரி பட்டு வரமாட்டாரு”... தவெக தலைவரை பொசுக்கென அசிங்கப்படுத்திய சீமான்...!

இந்நிலையில் குன்னம் கிராமத்தில் வீடு வீடாக சென்று அக்கட்சியின் பொது செயலாளர் ஆனந்தன் பெண்களுக்கு விஜய் மக்கள் சந்திப்புக்கு அழைப்பு விடுத்து அனுமதி அட்டையை வழங்கி வருகிறார்.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கரூர் சுற்றுப்பயணத்திற்கு பிறகு நாளை தான் முதல் முறையாக மக்களை சந்திக்க உள்ளார். ஆகவே கட்டுக்கடங்கா கூட்ட நெரிசல் ஏற்பட்டு கரூர் சம்பவம் போன்ற அசம்பாவிதம் நடைபெறாதவாறு கூட்டத்தை கட்டுப்படுத்த யாரும் உள்ளே நுழையாமல் இருக்க கல்லூரி வளாக முழுவதும் மிக உயரமான இரும்பு சீட் அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

மேலும் நேற்று சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வருகையொட்டி தமிழக வெற்றி கழகத்தினர் பாதுகாப்பு வேண்டி கடிதம் அளித்துள்ளனர். இதுவரையில் அந்த கடிதத்திற்கான பதில் காவல்துறையினர் தரப்பில் தற்போது வரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: எனக்கா அனுமதி தரமாட்டேங்குறீங்க... நாளை முதல் மக்கள் சந்திப்பு... புது ரூட்டை கையில் எடுத்த விஜய்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share