எனக்கா அனுமதி தரமாட்டேங்குறீங்க... நாளை முதல் மக்கள் சந்திப்பு... புது ரூட்டை கையில் எடுத்த விஜய்...!
மாவட்ட வாரியாக உள் அரங்குகளில் மக்கள் சந்திப்பை நடத்த தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாவட்ட வாரியாக உள் அரங்குகளில் மக்கள் சந்திப்பை நடத்த தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் சம்பவத்திற்கு பிறகு பொதுமக்களை சந்திக்காமல் இருக்கும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாளை காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில மக்கள் சந்திப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டபோது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதன் பிறகு பொது நிகழ்வுகளில் விஜய் பங்கேற்காமலே இருந்து வந்தார். இதனிடையே கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுடைய குடும்பத்தினரை சென்னைக்கே அழைத்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து சோகத்தில் இருப்பதாக கூறிய விஜய் கொஞ்சம் கொஞ்சமாக கட்சி பணிகளை மேற்கொண்டு வந்தார். அதையடுத்து தற்போது மீண்டும் மக்கள் சந்திக்க ஆயத்தமாகி இருக்கிறார்.
இதையும் படிங்க: "நேற்று முளைத்த காளான்கள்..." - விஜயை மறைமுகமாக சாடிய பிரேமலதா விஜயகாந்த்...!
இதற்காக தமிழகம் முழுவதும் 4000 பேரை தேர்வு செய்து மக்கள் பாதுகாப்பு படையையும் உருவாக்கி வருவதாகவும், தகவல் வெளியாகி இருக்கிறது. அவர்களுக்கு ராணுவம் மற்றும் காவல்துறையில் ஓய்வு பெற்ற அதிகாரிகளைக் கொண்டு பயிற்சி அளித்து வருகிறார்.
இந்நிலையில் தான் சேலத்திலிருந்து டிசம்பர் நான்காம் தேதி முதல் மீண்டும் பிரச்சாரத்தை தொடங்க விஜய் முடிவு செய்திருந்தார். ஆனால் திருவண்ணாமலை கார்த்திகை திருவிழா உள்ளிட்ட சில பாதுகாப்பு காரணங்களால் வேறொரு தேதியில் பிரச்சாரத்தை வைத்துக்கொள்ள போலீசார் அறிவித்திருந்தனர். இதற்கிடையே நாளை காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில பொதுமக்களை சந்திக்க விஜய் திட்டமிட்டுருக்கிறார்.
இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்களை சந்திக்கிறார், அதாவது காஞ்சிபுரத்தில் நலிவடைந்திருக்கக்கூடிய விவசாயிகளையும் அதேபோல அங்க இருக்கக்கூடிய பொதுமக்களையும் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது:இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தொண்டரணியினர் மேற்கொண்டு வருகிறார்கள். அதே கல்லூரி வளாகத்திலே ஏறத்தாழ ஐந்து நாட்களுக்கு மேலாக தொண்டரணியினர் அதற்கான பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். விஜய் எங்கெல்லாம் சுற்று பயணம் மேற்கொள்கிறாரோ, கட்சி நிகழ்ச்சி நடக்கிறதோ, அங்கே
பொதுமக்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் பாதுகாப்பை ஏற்படுத்தும் வகையில் தொண்டரணியினருக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஜேபிஆர் பொறியியல் கல்லூரியில் நாளை காலை 10 மணி முதல் 3 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும் எனக்கூறப்படுகிறது.
இதையும் படிங்க: "ஒரு தவறு செய்தால்... அதை தெரிந்து செய்தால்..." - சாட்டையைச் சுழற்ற தயாராகும் விஜய்... தவெ மா.செ.க்களுக்கு ஆப்பு...!