“தலையை வெட்டி விடுங்கள்...” - விஜய் சொன்னதுமே ஜர்க்கான சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்... குட்டி ஸ்டோரி சொன்ன தளபதி...!!
இன்று சட்டப்பேரவையில் ஆற்றிய தனது உரையில் தனது ஸ்டைலில் சொன்ன குட்டி ஸ்டோரி அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழக முதலமைச்சராக முதல் முறையாக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய், இன்று சட்டப்பேரவையில் ஆற்றிய தனது உரையில் தனது ஸ்டைலில் சொன்ன குட்டி ஸ்டோரி அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசியதாவது: மக்களே மக்களுக்காக மக்களால் நடத்தும் ஆட்சி மக்களாட்சி என்றார் அமெரிக்க முன்னாள் குடியரசு தலைவர் திரு அபிராம் லிங்கன். இன்றைக்கு அமைந்துள்ள மக்களாட்சி மலர்வதற்கு மக்களிடம் உள்ள பெரும் எதிர்பார்ப்பு அவர்களுடைய எதிர்பார்ப்புகளை இப்பேரவையின் கவனத்திற்கு கொண்டுவந்து அதனை செயல்படுத்துவதற்கான திட்டங்களை சட்டங்களை அமல்படுத்த வேண்டிய பொறுப்பு இப்பேரவைக்கு உள்ளது. அதிகமான மக்கள் அதிக நன்மைகளை இந்த ஆட்சி காலத்தில் நன்மை பெற்றுள்ளார்கள் என்கிற வகையில் நம்முடைய செயல்பாடுகள் அமைய வேண்டும். இங்கே அனைவரும் சமம் ஓர் ஓர் உறுப்பினரை கொண்ட கட்சிகள் இங்கே இடம் பெற்றிருந்தாலும் அவர்களுடைய கருத்துகளுக்கும் அதிக எண்ணிக்கை பெற்ற தமிழக வெற்றிக்கழக உறுப்பினர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கும் சமமாகவே மதிப்பளிக்கப்பட்டு, நல்லவை ஏற்கப்பட்டு அல்லவை நிராகரிக்கப்பட்டு ஜனநாயகத்தின் இதயமாகவும் மூளையாகவும் இப்பேரவை செயல்பட வேண்டும்.
அதற்குரிய வகையில் பெருமை வாய்ந்த வரலாற்று சிறப்பு கொண்ட பேரவையை நடத்திச் செல்லும் பண்பை பெற்றுள்ளவரையே தமிழக வெற்றி கழகம் மும்மொழிந்தது. தாங்கள் இன்றைக்கு இந்த ஆசனத்தில் அமர்ந்துள்ளீர்கள். மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே தாங்கள் பேரவை தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். தங்களை இந்த ஆசனத்தில் மான்புமிகு பேரவை முன்னவரும் எதிர்கட்சி தலைவரும் தங்களுடைய கரங்களை பிடித்து அழைத்துச் சென்று அமர வைத்தார்கள். இந்த சம்பிரதாயம் எப்படி வந்தது என்று சொன்னால் சுவாரசியமாக இருக்கும். பெரிய வரலாறு சம்பவத்தில் உள்ளது இங்கிலாந்து நாட்டில் உள்ள பாராளுமன்றம் நடைமுறைகளை போன்றதே நம்முடைய பாராளுமன்ற நடைமுறைகளும் மன்னராட்சி இருந்த காலத்திலேயே அங்க பாராளுமன்றம் இயங்கியுள்ளது.
இதையும் படிங்க: ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் சமம்..! சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் உறுதி..!
அக்காலத்தில் அனைத்து அதிகாரங்களையும் பெற்ற மன்னரும் இருந்தார். பாராளுமன்றமும் இயங்கியது. அங்கே மன்னர் ஒரு பணியை செய்ய வேண்டும் என்று விரும்புவார். பாராளுமன்றம் அவருடைய விருப்பத்தை பெரும்பாலும் நிராகரிக்கும். மன்னர் விரும்பிய காரியத்தை பாராளுமன்றம் நிராகரித்து விட்டது என்கிற செய்தியை மன்னருக்கு சொல்ல வேண்டியவர் பாராளுமன்ற தலைவர் ஸ்பீக்கர் என்பார். பாராளுமன்றத்தின் கருத்தை மன்னரிடம் சொல்ல வேண்டியவர் ஸ்பீக்கர் அதற்கு துணிவு வேண்டும் சில பணிகளை செய்வதற்குதான் பாராளுமன்றத்தின் அனுமதி வேண்டுமே தவிர அந்த ராஜ்யத்தில் உள்ள எந்த பிரஜைக்கும் மரண தண்டனை விதிக்கும் அதிகாரம் மன்னருக்கு உண்டு. தான் விரும்பியதை பாராளுமன்றம் நிராகரித்து விட்டது என்று சொல்லும் ஸ்பீக்கருக்கு மரண தண்டனை விதிக்கும்படி ஆணையிடுவார்.
தலையை வெட்டி விடுங்கள் என்று ஆணையிடுவார்கள். இது பலமுறை நடந்ததால் யாருமே இந்த ஸ்பீக்கர் பதவிக்கு வர விரும்ப மாட்டார்கள். எனவே புதிதாக பாராளுமன்றம் அமையும்போது ஸ்பீக்கர் பதவிக்கு ஒருவர் அறிவிக்கப்பட்டவுடன் அவர் உடனே “தலை தப்பித்தால் போதும்” என்று ஓட்டம் பிடிப்பார். அவை முன்னவரும் எதிர்கட்சி தலைவரும் அவரை தடுத்து நிறுத்தி அவர் கைகளை பிடித்து இழுத்து வந்த ஆசனத்தில் அமர வைப்பார். இதுதான் அந்த காலத்தில் இருந்து வந்த மரபு. ஜனநாயக முறை ஏற்பட்ட பிறகும் இம்மரபு தொடர்கிறது. நிச்சயமாக தமிழக வெற்றிக்கழக உறுப்பினர்கள் அனைவருமே உங்களுக்கு உதவிக்கரமாகவே இருப்பார்கள் என்கிற வாக்குறுதியை இந்நேரத்தில் அளிக்க விரும்புகிறேன். பேரவையின் மாண்பையும் கண்ணியத்தையும் பேரவை உறுப்பினர்களின் கண்ணியத்து கண்ணியத்தையும் காக்க வேண்டிய பொறுப்பை உங்களிடத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள் என்றார்.
இதையும் படிங்க: அரசியலில் நாங்க தான் சீனியர்..! எதிரி கட்சி இல்ல.. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேரவையில் உரை..!