ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் சமம்..! சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் உறுதி..!
சட்டசபையில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் சமமாக மதிக்கப்படும் என முதல்வர் விஜய் உறுதி அளித்தார்.
தமிழ்நாடு அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுதிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையிலான அரசு, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் முக்கிய தருணத்தை எதிர்நோக்கியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று ஒற்றைப் பெரிய கட்சியாக உருவெடுத்த நிலையில், கூட்டணி ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள விஜய், ஆளுநர் உத்தரவின்படி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் தனது பலத்தை நிரூபிக்க வேண்டும்.
மே 10-ம் தேதி நேரு ஸ்டேடியத்தில் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றார். அவருடன் 9 தவெக அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர், விஜய்யை ஆட்சி அமைக்க அழைத்தபோதே, பெரும்பான்மையை சட்டமன்றத் தளத்தில் நிரூபிக்க வேண்டும் என்ற தெளிவான உத்தரவைப் பிறப்பித்தார்.
அதன்படி இன்று பெரும்பான்மையை தமிழக வெற்றி கழகம் நிரூபிக்கும் நிலையில், புதிய சபாநாயகர் ஜே சி டி பிரபாகர் இன்று பொறுப்பேற்று பேரவையை வழிநடத்தி வருகிறார். அவரை வாழ்த்தி உறுப்பினர்கள் பேசி வருகின்றனர். இந்த நிலையில்
இதையும் படிங்க: என்ன நடக்கபோகுதோ..! பெரும்பான்மை நிரூபிக்கும் தவெக..! சட்டசபைக்கு புறப்பட்ட முதல்வர் விஜய்..!
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி கருத்துகள் சமமாக மதிக்கப்படும் என முதல்வர் விஜய் உறுதிப்பட தெரிவித்தார். பேரவையின் மாண்பை சபாநாயகர் காக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் கூறினார். அரசியலுக்கு அப்பாற்பட்டு பண்புகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்று முதல்வர் விஜய் தெரிவித்தார். தொடர்ந்து சபாநாயகர் இருக்கையின் முக்கியத்துவம் குறித்தும் எப்படி உருவானது என்பது தொடர்பாகவும் எதற்காக கைப்பிடித்தவரை அந்த இருக்கையில் அமர வைக்கிறார்கள் என்பது குறித்தும் முதல்வர் விஜய் தெளிவுபடுத்தினார்.
இதையும் படிங்க: தவெக தொண்டர்கள் ஷாக்... விஜய் முதலமைச்சர் ஆக வேண்டி தீக்குளித்த தவெக நிர்வாகி உயிரிழப்பு...!