×
 

ரவுடி கலாச்சாரத்தை ஏவும் தவெக... விஜய் மேல case போடுங்க... பொன்ராஜ் புகார் மனு..!!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உள்ளிட்ட கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்ய பொன்ராஜ் புகார் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் தளபதி என்று அழைக்கப்படும் நடிகர் விஜய், தனது திரை வாழ்க்கையின் மூலம் தமிழக மக்களின் இதயங்களை கைப்பற்றியவர். ஆனால், அவரது அரசியல் பயணம் தொடங்கியபோது, அந்த ரசிகர்களின் அன்பு இன்னும் ஆழமான, உணர்ச்சிகரமான வடிவத்தை அடைந்தது.  

 தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியபோது, விஜயின் ரசிகர்கள் அது வெறும் கட்சி அல்ல, அவர்களின் கனவுகளுக்கான ஒரு இயக்கம் என்று உணர்ந்தனர். இந்த அன்பு, வெறும் பட ரசிகர்களின் உற்சாகத்தைத் தாண்டி, அரசியல் அடிப்படை உருவாகி, ஆதரவு பெற்றுள்ளார். 

இதனிடையே, ஒரு நேர்காணலில் தவெகவை ஆதரிக்கும் பெண் தொண்டர்கள் மற்றும் ரசிகைகளை விமர்சிக்கும் வகையில் பொன்ராஜ் பேசினார். “புருஷன் எனக்குத் தேவையில்லை. எனக்கு விஜய்தான் வேண்டும் என்று சொல்லும் விபச்சார கூட்டம். அண்ணாவாக இருந்தாலும், தங்கையாகவும் இருப்போம், அக்காவாகவும் இருப்போம், பெண்டாட்டியாகவும் இருப்போம் என்று விபச்சாரிகள் நிறைந்த, ரசிகைகள் நிறைந்த தற்குறி கூட்டம் இருக்கிறது” என்பது போன்ற கடுமையான வார்த்தைகளை அவர் பயன்படுத்தினார். 

இதையும் படிங்க: எங்க கட்சிக்கு வாங்க..! விஜயே கூப்பிட்டாராம்..! அதிமுக EX. அமைச்சருடன் பேச்சுவார்த்தை..!

அவரது கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில் பொன்ராஜ் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். "தவெகவினர் சமூக வலைதளங்களில் தன்னை அவதூறாக சித்தரிக்கின்றனர்; கொலைமிரட்டலும் விடுக்கின்றனர். விர்ச்சுவல் வாரியர்ஸ் இதை செய்கிறார்கள். தமிழகத்தில் இத்தகைய ரவுடி கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் தவெக தலைவர் விஜய், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், லயோலா மணி, நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என விஜய்க்கு எதிராக சென்னை காவல் ஆணையரகத்தில் பொன்ராஜ் புகார் அளித்தார்.

இதையும் படிங்க: போட்றா வெடிய... HOTSPOT ஆன பெரம்பூர் தொகுதி..!! விஜய் வேட்பு மனுத் தாக்கல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share