×
 

ஆடியோ லீக்: விவாகரத்து மேட்டரால் டேமேஜ் ஆன விஜய் இமேஜ்... களமிறங்கிய பி.ஆர். நிறுவனம்... இன்ஃபுளூயன்சர்களுக்கு பறந்த போன் கால்...!

பி.ஆர். நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் கவி என்கிற சோசியல் மீடியா இன்ஃபுளூயன்சரிடம் பேசியுள்ள ஆடியோ வெளியாகியுள்ளது.

விஜயிடம் விவாகரத்து கோரி அவரது மனைவி நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், டேமேஜ் ஆன இமேஜை சரிய செய்வதற்காக சோசியல் மீடியா இன்ஃபுளூயன்சர்களுக்கு பி.ஆர். நிறுவனம் ஒன்று களமிறங்கியுள்ளதாக ஆடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும், முன்னணி நடிகருமான சி. ஜோசப் விஜய் சந்திரசேகர் மீது அவரது மனைவி சங்கீதா விஜய், செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரித் தாக்கல் செய்துள்ள மனுவின் விபரங்கள் தற்போது வெளியாகித் தமிழகத்தையே அதிரவைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே இவர்கள் இருவருக்கும் இடையே நிலவி வந்ததாகக் கூறப்படும் விரிசல், தற்போது சட்ட ரீதியானப் போராட்டமாக மாறியுள்ளது.

2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருந்ததைச் சங்கீதா கண்டுபிடித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். விஜய் அந்த உறவை முடித்துக் கொள்வதாக உறுதியளித்த போதிலும், அதனைத் தொடர்ந்து வந்ததாகவும், இது தனக்குத் தாங்க முடியாத மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் அவர் மனுவில் கூறியுள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் விஜய் தன்னை உணர்வு ரீதியாகவும், உடல் ரீதியாகவும் முற்றிலுமாகப் புறக்கணித்துத் தனிமைப்படுத்தியதாகச் சங்கீதா குற்றம் சாட்டியுள்ளார். விவாகரத்து வழங்கக் கோருவதுடன், தற்போது வசித்து வரும் நீலாங்கரை இல்லத்தில் வசிக்கத் தனக்கு அனுமதி வழங்க வேண்டும் அல்லது தகுதியான மாற்று இடத்தை செய்து தர வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அந்த நடிகை பெயரை சொல்லட்டா? விஜய் - சங்கீதா விவாகரத்து... பரபரப்பு புகார்..!!!

2026 சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், இந்த விவகாரம் தமிழக வெற்றிக் கழகத்திற்கும், விஜய்க்கும் மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனையடுத்து விஜய்க்கு ஆதரவாக சோசியல் மீடியாவில் களமிறங்கியுள்ள தவெக தொண்டர்கள் சங்கீதாவையும், திமுகவையும் விமர்சித்து பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த டேமேஜ் கண்ட்ரோல் வேலைகளுக்குப் பின்னால் விஜயின் பி.ஆர். நிறுவனம் களமிறங்கியுள்ளது. ஆடியோ ஆதாரத்துடன் அம்பலமாகியுள்ளது. 

பி.ஆர். நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் கவி என்கிற சோசியல் மீடியா இன்ஃபுளூயன்சரிடம் பேசியுள்ள ஆடியோவில், விவகாரத்து தொடர்பான செய்திகள் நமது கையை மீறி சென்று கொண்டிருக்கிறது. இதனால் தவெக தலைமை டூல் கிட்டை கையில் எடுக்க சொல்லியிருக்கிறது. அதாவது கரூர் விவகாரம், ஜனநாயகன் படத்தை முடக்கியது, பாஜகவும் - அதிமுகவும் சேர்ந்து கூட்டணிக்காக சிபிஐ அலுவலகத்தில் வைத்து விஜயை அலைக்கழித்தார்கள், மக்கள் சந்திப்பிற்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளீர்கள். இதை எல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் என பதிவிட்டு,  WE SUPPORT VIJAY என்ற ஹேஷ்டேக்குடன் சோசியல் மீடியாவில் பதிவிடப்போகிறோம். கடந்த முறை கரூர் விவகாரத்தின் போது என்ன உத்வேகத்துடன் பணியாற்றினோமோ, அதேபோல் முதலில் பதிவு போடுங்கள், பின்னர் வீடியோ வெளியிடுங்கள். அதில் திமுகவை மட்டுமே குறிவைக்க வேண்டும். சங்கீதா மேடமைப் பற்றி எதுவும் விமர்சிக்க வேண்டாம் என பேசியுள்ளார். 

இந்த ஆடியோ சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் தவெக மற்றும் திமுகவினர் இடையே பெரும் வார்த்தைப் போர் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


 

இதையும் படிங்க: திமுக மூழ்கும் கப்பல்... இதுல OPS வேற..! தவெக அருண்ராஜ் விமர்சனம்.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share