கடலூர் ஜோசியர் கைப்பிடியில் விஜய்.. ஜெயலலிதா பாணியில் தவெக வேட்பாளர்கள் தேர்வு தீவிரம்..!
தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் தேர்வில் விஜய் ஜெயலலிதா பாணியை கடைபிடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வர உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையிலேயே தமிழக தேர்தல் களம் தீயாய் மாறியுள்ளது. ஒரு பக்கம் திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ நடத்தி வருகிறார். மற்றொரு பக்கம் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இப்படி இரண்டு திராவிட கட்சிகளும் தேர்தல் பரப்புரையைத் தொடங்கியுள்ள நிலையில், விஜய் வேட்பாளர்களையே தேர்வு செய்ய ஆரம்பித்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதுவும் குறிப்பாக மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் பாணியில் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு கனகச்சிதமாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தான் பக்க பலமாக இருந்து செயல்படுத்தி வருவதாக பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தவெக தலைவர் விஜய், பனையூர் தலைமை அலுவலகத்தில் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான பணிகளை தீவிரமாக தொடங்கிவிட்டாராம்.
இதையும் படிங்க: கட்சி கொடியில் குழப்பம் வரும்... நாதக-வை விஜய் பின்பற்றுவதில் மகிழ்ச்சி... சீமான் சுவாரஸ்ய தகவல்!!
எந்த தொகுதிக்கு யாரை வேட்பாளராக போடலாம் என்ற டிஸ்கஷன் சீரியஸாக போய் கொண்டிருக்கிறதாம். இதில் விஜய்க்கு அடுத்தபடியாக முக்கியமான முடிவுகளை எடுக்கும் இடத்தில் புஸ்ஸி ஆனந்த் இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்ப போயிட்டு இருக்கற தேர்வு முதல் கட்டம் தானாம். அதில் கட்சி தலைமை ஓகே செய்யும் வேட்பாளர்கள் கிட்ட அவங்களோட ஜாதகங்களை கேக்குறாங்களாம். அதை கடலூரில் இருக்கும் ஒரு ஜோசியரிடம் அனுப்பி வைக்கிறார்களாம். அந்த ஜோசியர் புஸ்ஸி ஆனந்திற்கு மிகவும் வேண்டப்பட்டவர் எனக்கூறப்படுகிறது. அவரிடம் தான் புஸ்ஸி ஆனந்த் தொடர்ந்து ஜாதகம் பார்த்து வருகிறாராம்.
அந்த ஜோசியர் தான் பாண்டிச்சேரியைச் சேர்ந்த புஸ்ஸி ஆனந்த், தமிழக அரசியலில் கால் வைக்கப்போகிறார் என அடித்துக்கூறினாராம். அவர் சொன்னது போலவே தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளராக வலம் வருவதால் புஸ்ஸி ஆனந்த் அந்த ஜோசியரை அபாரமாக நம்புகிறாராம். அவர் சொன்னால் அப்படியே பலிக்கும் என விஜயை மண்டையையும் பிரைன் வாஷ் செய்து, ஜாதங்களை கடலூருக்கு அனுப்பி வருவதாக செய்தி.
பெரியாரைக் கொள்கை தலைவராக கொண்ட தமிழக வெற்றிக் கழகம் தற்போது வேட்பாளர் தேர்வையும், தமிழக மக்களின் தலையெழுத்தையும் கடலூரில் உள்ள ஒரு ஜோசியர் கையில் கொடுத்திருப்பது தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. வேட்பாளர்களோட பொது வாழ்க்கை பலன்கள், அவங்களோட விசுவாசம், எதிர்காலம்னு பல கோணங்கள்ல கட்டங்களை அலசி ரிப்போர்ட் அனுப்புவாராம் கடலூர் ஜோசியர். ஒரு காலத்துல ஜெயலலிதாவும் ஒரு சில தேர்தல்கள்ல இதே பாணியை கடைபிடிச்சுதான் சொல்லுவாங்க. இப்ப ஜெயலலிதா பாணியை விஜய் கையில் எடுத்திருப்பதாக பேச்சு கிளம்பியுள்ளது. இதில் கூடுதல் விவரம் என்னவென்றால், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கும் அந்த கடலூர் ஜோசியர் தான் ஆஸ்தான ஜோசியராம்.
இதையும் படிங்க: என்னது 2026ல் விஜய் தான் முதல்வரா..!! படத்தில் வந்த பரபரப்பு போஸ்டர்.. ஷாக்கில் ரசிகர்கள்..!