எதிரிகளுக்குள் செம டீலிங்… என்னால பிழைப்பு போய்டுச்சாம்..! திமுக, அதிமுகவை விளாசிய விஜய்..!!
தஞ்சையில் நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளை விஜய் விமர்சித்தார்.
தஞ்சாவூரில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி மிகுந்த எதிர்பார்ப்புடன் நடைபெற்றது. தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்தும் வகையில் தவெக தலைவர் விஜய் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செங்கிப்பட்டி அருகே நடைபெற்ற தமிழகத்தில் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் விஜய் பச்சைத் துண்டுடன் கலந்து கொண்டார்.
தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், ஒருவன் அமைதியாக இருந்தால் எதுவும் தெரியாது என நினைத்து விடாதீர்கள் என்றார். மீனவர்கள் பிரச்சனைக்கு கடிதம் எழுதிவிட்டு முதலமைச்சர் தூங்க போய் விடுவதாக விமர்சனம் செய்தார். மீனவர்கள் மீது கை வைக்கக் கூடாது என்றும் உரியவர்களிடம் பேசி அதற்கான தீர்வு எட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்த உடன் மீனவர்கள் பிரச்சனைக்கு பேச்சளவில் இல்லாமல் உரிய தீர்வு எட்டப்படும் என்று தெரிவித்தார். மக்களுக்கான உழைப்பு இருக்க வேண்டும் என்றும் எதிரிகளுக்கு இதையெல்லாம் நன்றாக தெரியும் எனவும் தெரிவித்தார். மீண்டும் திமுக ஆட்சி என்ற சரித்திரமே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இளைஞர் கவலைக்கிடம்... விஜய் வாகனத்தை பின் தொடர்ந்ததால் விபத்து..!!
எதிரிகள் வெளியில் அடித்துக் கொள்வது போல் அடித்துக் கொள்ளலாம் என்றும் நமக்குள் டீல் முக்கியம் என்றும் விஜய் பிழைப்பு நடத்த விட மாட்டார் என்று அவர்கள் நினைப்பதாகவும் தெரிவித்தார். பழிமேல் பழி போட்டு கரூரில் ஆரம்பித்து ஜனநாயகன் ரிலீஸ் வரைக்கும் பிரச்சனை கொடுப்பதாகவும், ஜனநாயகன் விவகாரத்தில் ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டார். ஜனநாயகன் விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மட்டும் படாமல் கருத்து தெரிவித்ததாக கூறினார்.
இதையும் படிங்க: ஸ்டாலின் தொடரட்டும்… சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கட்டும்… நாங்குநேரி விஷயத்தில் தலையிட்ட விஜய்..!!