×
 

“அந்த தப்பு மட்டும் திரும்ப நடக்கவே கூடாது...” - ஸ்ட்ரிக்ட் ஆக உத்தரவு போட்ட விஜய்... தவெக நிர்வாகிகளுக்கு சம்மட்டி அடி...!

கடந்த சனிக்கிழமை அன்று திருச்சி அரியலூர் மாவட்டங்களுக்கு விஜய் பிரச்சாரம் செய்ய சென்றபோது பல சிக்கல்கள் ஏற்பட்டன.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வருகிற 20ஆம் தேதி நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மூன்று மாவட்டங்களில் பிரச்சாரம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த சனிக்கிழமை அன்று திருச்சி அரியலூர் மாவட்டங்களுக்கு விஜய் பிரச்சாரம் செய்ய சென்றபோது பல சிக்கல்கள் ஏற்பட்டன. அதன் காரணமாக தாவேக்க தலைவர் விஜய் சில அதிரடி உத்தரவுகளை போட்டுள்ளார். 

கடந்த 13 ஆம் தேதி அன்று திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மூன்று  மாவட்டங்களில் பிரச்சாரம் செய்ய இருந்த நிலையில் காலையிலேயே சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் விஜய் திருச்சி வந்தடைந்தார். பிரச்சார வாகனத்தில் ஏறிய விஜய் மரக்கடை பகுதியை நோக்கி பயணித்தார். ஆனால் விமான நிலையத்தில் தொடங்கி வழிநெருகிலும் எதிர்பார்த்ததை விட அதிகளவு தொண்டர்கள் சூழ்ந்ததால் பத்தரை மணிக்கு தொடங்க வேண்டிய பிரச்சாரம் நான்கு மணி நேரத்திற்கு மேல் தாமதமாகவே தொடங்கியது. திருச்சி மரக்கடையில் நடந்த பிரச்சாரத்தில் விஜய் பேசிக்கொண்டிருந்த போது மைக் வேலை செய்யாமல் பாதியிலேயே நின்றது. இதனால் சுற்றி இருந்த தொண்டர்களுக்கு விஜய் பேசுவது தெளிவாக கேட்கவில்லை. 

பின்னர் திருச்சியில் இருந்து அரியலூருக்கு பிரச்சாரம் செய்ய புறப்பட்டு சென்றார். விஜய் அரியலூரில் பேசியது மட்டுமே தொலைக்காட்சியில் பார்ப்பவர்களுக்கும் நேரில் பார்ப்பவர்களுக்கும் அன்றைய உரையாக இருந்தது. ,“நம்ம மக்களை அதாங்க உங்க எல்லாரையும் பார்த்துட்டு போலாம்னு வந்திருக்கிறேன். இங்க என்ன பார்க்க வந்திருக்கிற என்னுடைய அம்மாக்கள், அக்கா தங்கைகள், அண்ணன் தம்பிகள், நண்பர்கள் நண்பிகள் உங்க எல்லாரையும் பார்க்கும்போது மனசுக்குள்ள ஒன்னே ஒன்னுதான் தோணுது. உங்களுடைய இந்த அன்புக்காக எவ்வளவு பெரிய உயரத்தையும், எவ்வளவு பெரிய வருமானத்தையும், எவ்வளவு பெரிய வசதியையும் தூக்கி எறிஞ்சிட்டு வரலாங்க” என உரையாற்றி இருந்தார். 

இதையும் படிங்க: போடுறா வெடிய... நாளை விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி... ஆனா போலீஸ் கொடுத்த அதிரடி ஷாக்...!

அதன் பிறகு இறுதி பிரச்சார இடமாக இருந்த பெரம்பலூர் வானொளி திடலை நெருங்குவதற்கு இரண்டு கிலோமீட்டர் தூரம் இருந்தது அப்போதே நேரம் ஒன்றரை மணி ஆகி விட்டது. இதனால் எப்படியும் அந்த பகுதியை சென்றடைவதற்கு அதிகாலை மூன்று மணி ஆகிவிடும் என்ற காரணத்தால் விஜய் பெரம்பலூர் பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு, சென்னை நோக்கி புறப்பட்டார். இதனை தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயும், தலைமை கழக நிர்வாகிகளும் ஆலோசனை மேற்கொண்டனர். அதன் பெயரில் ஒரு நாளைக்கு இரண்டு மாவட்டங்களுக்கு மட்டுமே சென்று பிரச்சாரம் செய்ய உள்ளதாக தமிழக வெற்றி கழகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

ஆனால் வருகிற 20ஆம் தேதி சனிக்கிழமை அன்று நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மூன்று மாவட்டங்களில் சந்திப்பதற்காக திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது மக்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் மட்டும் பிரச்சாரம் நடத்த திட்டமிடப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதே போன்று கடந்த சனிக்கிழமை நடந்த பிரச்சாரத்தின் போது தொண்டர்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் சிலர் மயங்கி விழுந்தனர். போதிய மருத்துவ வசதி இல்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டது. அதே நேரத்தில் விஜய் பேசியபோது மைக் ஸ்பீக்கர் சரியாக வேலை செய்யவில்லை. இதனை அனைத்தையும் பாடமாக எடுத்துக்கொண்டு வருகின்ற பிரச்சாரங்களில் இவை அனைத்தையும் சரி செய்ய வேண்டும் என விஜய் ஸ்ட்ரிக்ட்டாக கட்சியின் தலைமை நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதையும் படிங்க: அடக்கொடுமையே...விஜய்யால் ஏற்பட்ட கடன் தொல்லை... செயின் திருடனாக மாறிய தவெக தொண்டர்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share