×
 

ஓவர் கான்பிடெண்ட்... கரூர் தொகுதியில் மதியழகனை களமிறக்கும் தவெக... தெருத் தெருவாக மக்கள் காலில் விழுந்து பிரசாரம்...!

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் முதலமைச்சராக வேண்டி பட்டாளம்மன் கோவிலில் வழிபாடு செய்து பொதுமக்கள் காலில் விழுந்து பிரச்சாரத்தை தவெக தொடங்கினர்.

கரூர் மாவட்டம் கோடாங்கிப்பட்டி பகுதியில் அமைந்துள்ள பட்டாளம்மன் கோவில், அரசியல் கட்சிகளுக்கு ஒரு சென்டிமென்ட் தலமாக விளங்குகிறது. எந்த ஒரு அரசியல் கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினாலும், இந்த கோவிலில் முதலில் சிறப்பு வழிபாடு நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 

அந்த வகையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இங்கு வழிபட்டுத் தனது பரப்புரையைத் தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வேட்பாளர் நேர்காணல் நிறைவடைந்துள்ள நிலையில், கரூர் தொகுதியில் மதியழகன் போட்டியிடுவார் என்று பரவலாகக் கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, இன்று மதியழகன் மற்றும் கழக நிர்வாகிகள் பட்டாளம்மன் மற்றும் மாரியம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். வழிபாடு முடிந்த கையோடு, அங்கிருந்த பொதுமக்களின் காலில் விழுந்து ஆசி பெற்ற மதியழகன், கட்சியின் 'விசில்' சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

இதையும் படிங்க: நீங்க தான் வேட்பாளர் உங்கள நான் எம்எல்ஏவாக பார்க்கணும்... 50 பேரை டிக் அடித்த விஜய்... அப்போ என்.டி.ஏ. கூட்டணி?!

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மதியழகன்:  எங்கள் தலைவர் விஜய் அவர்கள் முதலமைச்சராக வேண்டி இந்த சிறப்பு வழிபாட்டை நடத்தியுள்ளோம். திராவிடக் கட்சிகள் இங்கிருந்து தொடங்குவது போல, அம்மனின் அருள் பெற்று நாங்களும் வெற்றியை உறுதி செய்ய இங்கிருந்து பரப்புரையைத் தொடங்கியுள்ளோம் என தெரிவித்தார்.

செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் கரூரில் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதற்கட்டமாக இந்த துயர சம்பவத்திற்கு தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் முதல் குற்றவாளியாக பதிவு செய்யப்பட்டார். இவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த மூவரும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டு வந்தது. கைதுக்கு பயந்து தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வெளியாகி வந்தன. முதல் குற்றவாளியாக அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவரை கரூரில் களமிறக்கியுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

இதையும் படிங்க: அறிவு இருக்குறவங்கள அனுப்பனும்... அரசியல் சினிமா டயலாக் இல்ல.. விஜய் மீது ரஞ்சனா தாக்கு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share