×
 

விஜய் Vs தனுஷ்: தமிழக அரசியலில் உருவாகும் புதிய போட்டி! ஸ்டாலினுக்கு காத்திருக்கும் சவால்?

விஜய் அரசியலுக்கு வரவில்லை என்றால் உதயநிதி ஸ்டாலினுக்கு முதலமைச்சராகும் வாய்ப்பு இருந்திருக்கும்.

தமிழக அரசியல் களத்தில் எதிர்காலத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பிரபல ஜோதிடர் ரத்தன் பண்டிட் புதிய கணிப்புகளை வெளியிட்டுள்ளார். விஜய் முதலமைச்சராக இருப்பதால் தற்போது குறிப்பிடத்தக்க போட்டி இல்லாத நிலையில், நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரும் போது புதிய போட்டி உருவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

ரத்தன் பண்டிட் பல ஆண்டுகளாக அரசியல் தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் தொழில்துறை பிரபலங்களுக்கு ஜோதிட ஆலோசனை வழங்கி வருபவர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடராக இருந்த பெருமைக்குரியவர். தற்போதைய முதலமைச்சர் விஜயுடனும் நீண்டகாலமாக நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. 

சமீபத்திய தமிழக சட்டசபை தேர்தலின்போது அவரது கணிப்பு பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தல் ஆணையம் காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என அறிவித்திருந்த நிலையில், அதற்கு முன்பே காலை 9 மணியளவில் பூங்கொத்துடன் விஜயை நேரில் சந்தித்து “வெற்றிக்கு வாழ்த்துகள்” என்று வாழ்த்தியிருந்தார். பின்னர் விஜய் வெற்றி பெற்று முதலமைச்சர் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அவரது ஜோதிடத் திறன் உலகளவில் கவனம் பெற்றது.

இதையும் படிங்க: தனுஷின் அரசியல் பயணம் குறித்து ஜோதிடர் கணிப்பு..!! திமுக, அதிமுகவுக்கு சவாலா?

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரத்தன் பண்டிட்டுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற பிறகு பேசிய அவர், முதலமைச்சர் விஜய் குறித்து தனது நம்பிக்கையை மீண்டும் வெளிப்படுத்தினார். “விஜய் கையில் கட்டியுள்ள சிவப்பு கயிறு முருகப்பெருமானின் அருளின் அடையாளம். அது வெற்றியையும் உயர்வையும் குறிக்கிறது. முருகனின் அருளால் அவருக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். அவர் எடுத்துள்ள பாதை வெற்றிப் பாதையாக அமையும்” என்றார்.

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து, “இனி அவருக்கு வெற்றி யோகம் இல்லை. அவரது அரசியல் பயணம் ஓய்வை நோக்கி செல்லும்” எனக் கூறினார். உதயநிதி ஸ்டாலின் விஷயத்தில், “விஜய் அரசியலுக்கு வரவில்லை என்றால் அவருக்கு முதலமைச்சராகும் வாய்ப்பு இருந்திருக்கும். தற்போதைய சூழலில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியே அமையும்” என்றார். அண்ணாமலைக்கு முதலமைச்சர் யோகம் இல்லை எனவும், இனி தமிழக அரசியலில் முக்கிய சக்தியாக விஜய் தான் இருப்பார் எனவும் தெரிவித்தார்.

முக்கியமாக நடிகர் தனுஷ் குறித்து, “எதிர்காலத்தில் அவர் அரசியலுக்கு வருவதற்கான யோகம் இருக்கிறது. அவர் அடியெடுத்து வைக்கும் காலம் வந்தால் தமிழக அரசியலில் புதிய போட்டி உருவாகும். அதுவரை விஜய்க்கு குறிப்பிடத்தக்க போட்டி இருக்காது. தனுசின் வருகைக்குப் பிறகே அரசியல் புதிய கட்டத்தை நோக்கிச் செல்லும்” எனக் கணித்தார். இந்தக் கணிப்புகள் விழாவில் பங்கேற்றவர்களின் கவனத்தை ஈர்த்ததுடன், சமூக வலைதளங்களிலும் பரபரப்பான விவாதங்களைத் தூண்டியுள்ளன.

இதையும் படிங்க: ஸ்டைலா? சென்டிமென்ட்டா? வெள்ளிக்கிழமை விஜய் அணியும் பட்டு வேட்டி, சட்டையின் பின்னணி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share