×
 

அமைச்சரவையில் 6 சீட்! துணை முதல்வர் பதவி! காங்கிரஸுக்கு வாரி வழங்கும் தவெக! ராகுல் - விஜய் டீல்!

த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்தால், காங்கிரஸ் கட்சிக்கு 70 தொகுதிகள், 1 துணை முதல்-அமைச்சர் பதவி, 6 அமைச்சர் பதவி என வாரி வழங்க தயாராக இருப்பதாக விஜய் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) கூட்டணி பேச்சுவார்த்தைகளில் பெரும் அதிரடி ஆபரை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்தால், காங்கிரஸ் கட்சிக்கு 70 தொகுதிகள், ஒரு துணை முதலமைச்சர் பதவி, ஆறு அமைச்சர் பதவிகள் என வாரி வழங்க தயாராக இருப்பதாக விஜய் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

த.வெ.க. தொடங்கி இரண்டு ஆண்டுகளே ஆனாலும், முதல் சட்டசபை தேர்தலில் பெரிய முத்திரை பதிக்க வேண்டும் என விஜய் உறுதியாக உள்ளார். விக்கிரவாண்டி மாநாட்டிலேயே “கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தருவோம்” என்று அறிவித்தார். இது தமிழக அரசியலில் அரை நூற்றாண்டாக ஆட்சி செய்த திராவிட கட்சிகளும் செய்யாத பெரிய ஆபராக பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி தற்போது தி.மு.க. கூட்டணியில் உள்ளது. ஆனால் 2024 மக்களவை தேர்தலில் 39 தொகுதிகளிலும் வென்றாலும், காங்கிரஸ் வாக்கு சதவீதம் 10.68 மட்டுமே. பாஜக ஒரு தொகுதியும் வெல்லவில்லை என்றாலும் 11.24 சதவீத வாக்குகளை பெற்றது. பாஜக வளர்ச்சி காங்கிரஸுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே தி.மு.க.விடம் 41 தொகுதிகள், 2 ராஜ்யசபா சீட்கள், உள்ளாட்சியில் 20 சதவீத இடங்கள் என கோரிக்கை வைத்துள்ளது.

இதையும் படிங்க: 234 தொகுதிக்கும் வேட்பாளர் ரெடி! ஃபுல் பார்மில் விஜய்!! விருப்ப மனு விநியோகத்தில் காத்திருந்த ட்விஸ்ட்!

ஆனால் தி.மு.க. இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. காங்கிரஸ் குழு ஒரு மாதத்துக்கு முன்பே அமைக்கப்பட்டும் பேச்சு தொடங்கவில்லை. இதனால் காங்கிரஸ் நிர்வாகிகள் விரக்தியில் உள்ளனர். கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட மேலிட தலைவர்களின் தமிழக வருகையும் தள்ளிப்போய் வருகிறது.

இந்நிலையில் ராகுல் காந்தி போன் மூலமும், பிரவீன் சக்கரவர்த்தி நேரிலும் விஜய்யை சந்தித்து பேசியுள்ளனர். த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்தால் காங்கிரஸுக்கு 70 தொகுதிகள், ஒரு துணை முதலமைச்சர், ஆறு அமைச்சர் பதவிகள் என விஜய் தரப்பு ஆபர் கொடுத்துள்ளது. மேலும் 2029 மக்களவை தேர்தலில் 28 தொகுதிகளை காங்கிரஸுக்கு தர உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அதிரடி ஆபரால் காங்கிரஸ் கட்சி யோசிக்கத் தொடங்கியுள்ளது. தி.மு.க. கூட்டணியில் இருப்பதா அல்லது த.வெ.க.வுடன் கைகோர்ப்பதா என்பது குறித்து உள் விவாதங்கள் நடக்கின்றன. டெல்லி மேலிட தலைவர்கள் விரைவில் விஜய்யை நேரில் சந்தித்து பேச்சு நடத்தலாம் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தமிழக அரசியலில் புதிய சூழல் உருவாகி வருகிறது. த.வெ.க.வின் இந்த ஆபர் கூட்டணி அரசியலை பெரிதும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: தேர்தல் ரேஸில் முந்தும் திமுக! வேட்பாளர் தேர்வில் மும்முரம்!! முதல்வர் ஸ்டாலின் டேபிளுக்கு போன லிஸ்ட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share