×
 

திமுகவின் கோட்டையை தகர்க்கும் விஜயின் பிரமாஸ்திரம்! தலையெழுத்தே மாறப்போகுது! ஹைஸ்பீடில் தவெக!

தற்போது ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்து வருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். முக்கியமாக Vijay இதில் பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்துவார் என்று கூறப்படுகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 களம் சூடுபிடித்து வரும் நிலையில், வெற்றியைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான காரணியாக 'பெண்கள் வாக்கு வங்கி' உருவெடுத்துள்ளது. கடந்த காலத் தேர்தல்களில் ஒரு கட்சியின் தலையெழுத்தை மாற்றியமைத்த இந்த வாக்கு வங்கியில் தற்போது பெரிய மாற்றம் நிகழ்ந்து வருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். குறிப்பாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததற்கு மிக முக்கிய காரணம், அக்கட்சியின் பாரம்பரிய பெண்கள் வாக்கு வங்கியை திமுகவிடம் இழந்ததுதான். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்திலிருந்து அதிமுகவின் அசைக்க முடியாத பலமாக இருந்த பெண்கள், 2021-ல் மு.க.ஸ்டாலினின் வாக்குறுதிகளை நம்பி திமுக பக்கம் சாய்ந்தனர். அந்த செல்வாக்கை அதிமுக இதுவரை முழுமையாக மீட்டெடுக்க முடியவில்லை. எனவே இப்போது அதிமுக இழப்பதற்கு பெரிதாக ஒன்றுமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

ஆனால் கடந்த ஐந்தாண்டுகளாக பெண்களின் ஆதரவை ஏகபோக உரிமையாக அனுபவித்து வந்த திமுகவுக்கு, விஜய்யின் வருகை சிம்ம சொப்பனமாக அமைந்துள்ளது. விஜய்யின் அரசியல் அறிமுகம், திமுகவின் பலமான பெண்கள் வாக்கு வங்கியில் பெரிய பிளவை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. 

இதையும் படிங்க: விஜய்க்கு தீராத தலைவலி!! தவெகவில் உச்சக்கட்ட உட்கட்சி மோதல்!! எச்சரித்தும் அடங்காத நிர்வாகிகள்!

"இது இளைஞர்களின் கட்சி மட்டுமல்ல, பெண்களின் பாதுகாப்பு, வாழ்வாதாரத்தை முன்னிறுத்தும் கட்சி" என்று விஜய் பேசுவது, திமுகவின் 'மகளிர் உரிமைத் தொகை' போன்ற திட்டங்களால் ஈர்க்கப்பட்ட பெண்களிடையே புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. பெண்களை மனதில் வைத்து பல முக்கிய வாக்குறுதிகளை விஜய் அளிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் திமுக தற்காப்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 10 பெண்களைக் கொண்ட குழுவை உருவாக்கி, திமுகவின் திட்டங்களை விளக்க உத்தரவிட்டுள்ளது. இது விஜய்யின் வருகையால் ஏற்பட்ட அச்ச உணர்வின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது.

தமிழக அரசியலில் புதிய சக்தி வரும்போது, ஆளும் கட்சியின் பலத்தில்தான் கை வைக்கும். அதிமுகவிடம் இல்லாத வாக்கு வங்கியை விஜயால் பறிக்க முடியாது. மாறாக திமுக நம்பியிருக்கும் பெண்கள் வாக்கு வங்கியைத்தான் விஜய் குறிவைத்துள்ளார். அவரது திரைப்படப் புகழ், 'மாற்று அரசியல்' பேச்சு, பெண்கள் ரசிகர்கள் அதிகம் இருப்பது ஆகியவை இந்த மாற்றத்தை வலுப்படுத்துகின்றன.

இந்த வாக்குகள் சிதறினால் திமுகவின் வெற்றி நேரடியாக பாதிக்கப்படும். திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தன்னை முன்னிறுத்தும் விஜய்யின் இந்த நகர்வு, 2026 தேர்தலின் மிகப் பெரிய கேள்வியாக மாறியுள்ளது.
 

இதையும் படிங்க: படர் தாமரை உடலுக்கு நாசம்! பாஜக தாமரை நாட்டுக்கே நாசம்! இபிஎஸ் - டிடிவி-யை வச்சு செய்யும் கருணாஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share