வேலூரில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி!! கறார் காட்டும் போலீசார்! 20 நிபந்தனைகள் விதிப்பு! தவெக-வினர் அப்செட்!
விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு 20 நிபந்தனைகள் அடங்கிய விண்ணப்பத்தை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் த.வெ.க. நிர்வாகிகளிடம் வழங்கினார்.
தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர், நடிகர் விஜய் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை தீவிரமாக நடத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக, வேலூர் மாவட்டம் அடுத்த அகரம்சேரியில் வரும் பிப்ரவரி 23-ஆம் தேதி பெரிய அளவிலான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 33 ஏக்கர் நிலப்பரப்பில் விரிவான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையிலான த.வெ.க. நிர்வாகிகள் அணைக்கட்டு தாலுகா போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சென்று அனுமதி கோரி மனு அளித்தனர். போலீசார் அதனை பரிசீலித்து அனுமதி வழங்குவதாக உறுதியளித்தனர்.
இந்நிலையில், நேற்று போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் த.வெ.க. நிர்வாகிகளை சந்தித்து, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அனுமதி தொடர்பாக 20 நிபந்தனைகள் அடங்கிய விண்ணப்பத்தை வழங்கினார். இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்து, துணை போலீஸ் சூப்பிரண்டிடம் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: காங்கிரஸே வந்தாலும் வேணாம்! மோடியை சமாளிக்க முடியாது! புது ரூட்டில் தவெக!! விஜய் எடுத்த மாஸ்டர் மூவ்!
இந்த நிகழ்ச்சியில் வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 25 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் குடிநீர், கழிப்பறை வசதிகள், மருத்துவ ஏற்பாடுகள், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. சென்னையிலிருந்து சாலை மார்க்கமாக காரில் விஜய் வேலூருக்கு வருகை தருகிறார்.
த.வெ.க. நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “விஜய்யை வாகனத்தில் யாரும் பின்தொடர வேண்டாம். முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் வர வேண்டாம். பொதுமக்களுக்கு எந்த இடையூறும், பாதிப்பும் ஏற்படாமல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போலீஸ் நிபந்தனைகளை பூர்த்தி செய்து அனுமதி பெற்ற பிறகு, நிகழ்ச்சி பாதுகாப்புடன் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. த.வெ.க. தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் நிலவுகிறது.
இதையும் படிங்க: ஐயாவுக்கும், அண்ணியாருக்கும் கதவை திறக்காத விஜய்! கேட்டை இழுத்து சாத்திய தவெக!! புது தேர்தல் கணக்கு?!