×
 

வேற நாதியில்ல... 'ஆண்டி'களை எல்லாம் கரெக்ட் பண்ணிட்டோம்... திமுக-வின் திமிர் பேச்சு..!

அவரது  பேச்சு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக எதிர்க்கட்சியினரால் இது பெரிதும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

"ஆண்டி'களை எல்லாம் திமுகவினர் கரெக்ட் பண்ணி வச்சிருக்கோம்" என பிரபல திமுக  பேச்சாளர் வெற்றிகொண்டானின் மகன் சூர்யா வெற்றிகொண்டான் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

திமுகவைச் சேர்ந்த பிரபல பேச்சாளர் வெற்றிகொண்டானின் மகன் சூர்யா வெற்றிகொண்டான். "ஆண்டிகளை எல்லாம் திமுகவினர் கரெக்ட் பண்ணி வச்சிருக்கோம்" என்று பேசியதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது திமுகவினருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களைத் தூண்டியுள்ளது. 

தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்று பேசிய அவர், பெண்களை இழிவாகக் குறிப்பிட்டு, திமுகவினரின் செல்வாக்கைப் பற்றி ஆணவமாகப் பேசினார்.'' சார் ஆண்டிகளை எல்லாம் கரெக்ட் பண்ணி வைச்சிருக்கோம். ஆண்டிகளையெல்லாம் முறையாக கரெட்க் பண்ணி வைச்சிருக்கோம். ஆண்டிகள் எல்லாம் முறையாக முடிவெடுத்து, திமுகவை தவிர வேறு நாதியே கிடையாதுடா என முடிவெடுத்து வைத்திருக்கிறார்கள். அத்தனை ஆண்டிகளும் எங்களுக்கு சரியாக இருக்கிறார்கள்' எனத் தெரிவித்தார்.

 

இதையும் படிங்க: கறுப்பு, சிவப்பு வேட்டியைப் பார்த்தாலே சிலருக்கு பயம்.. சரவெடியாக வெடித்த ஆ. ராசா.!!

அவரது  பேச்சு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக எதிர்க்கட்சியினரால் இது பெரிதும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இத்தனை கொச்சையாகப் பேசிய சூர்யா வெற்றி கொண்டானின் கருத்துக்கு திமுக தரப்பில் இருந்து எந்தவொரு முறையான பதிலும் இதுவரை வெளியிடப்படவில்லை. இது 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் திமுகவுக்கு சவாலாக அமையலாம்.

இவரின் சர்ச்சைப் பேச்சு திமுகவின் உள் கட்சி ஒழுங்கு, பேச்சாளர்களின் பொறுப்புணர்வு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இதற்கு முன்னர் திமுகவைச் சேர்ந்தவர்கள் மீதும் இதே போன்ற சர்ச்சைகள் எழுந்துள்ளன. சமீபத்தில் காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்.எல்.ஏ., சிவகுமாரின் பெண்கள் குறித்த பேச்சும், முன்னாள் அமைச்சர் பொன்முடியின் சைவ- வைணவம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகள் அவரது கட்சி, அமைச்சர் பதவிகளையே காவு வாங்கியது.

தொடர்ந்து சர்ச்சையாக பேசி வரும் திமுகவினரின் ஆணவப்பேச்சு திமுகவின் ஆட்சியையே காவு வாங்கும் எனக் கொதிக்கிறார்கள் பொதுமக்கள்.  திமுகவின் மகளிரணி தலைவி கனிமொழி இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: கமலுக்கு எம்.பி. பதவி.. வைகோவுக்கு உண்டா.? கிடைக்காவிட்டால் மதிமுக என்ன செய்யும்.. வைகோ அதிரடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share