×
 

அன்புமணியை அழிக்கத் துடிக்கும் சுசீலா?... ரகசிய படங்களை வெளியிட்டது யார்? - பாமகவில் புது பூகம்பம்..!

ராமதாஸுடன் இருக்கும் பெண்மணி யார்?, அவருக்கும் ராமதாசுக்கும் என்ன தொடர்பு? 50 ஆண்டு கால ரகசிய வாழ்க்கையை பொதுவெளிக்கு கொண்டு வந்தது யார் உள்ளிட்ட பல கேள்விகள் பாமகவில் புயலைக் கிளப்பியுள்ளது. 

பாமக நிறுவனர் ராமதாஸும்  ஒரு பெண்மணியும் மாலையும் கழுத்துமாய் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி அரசியல் களத்தை சூடாக்கிய நிலையில் யார் அந்த பெண் அவருக்கும் ராமதாசுக்கும் என்ன தொடர்பு? 50 ஆண்டு கால ரகசிய வாழ்க்கையை பொதுவெளிக்கு கொண்டு வந்தது யார் உள்ளிட்ட பல கேள்விகள் பாமகவில் புயலைக் கிளப்பியுள்ளது. 

 ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையேயான மோதல் கன்னிதீவு சிந்துபாத் தொடர் போல முடிவில்லாமல் நீண்டு கொண்டே போகின்றது. இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நாள் முதல் அன்புமணி மீதே ராமதாஸ் அவதூறுகளை அள்ளி வீசி வந்த நிலையில் முதல் முறையாக பொதுத்தளத்தின் விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறார் ராமதாஸ். பொதுவாழ்வில் கண்ணியமிக்க தலைவர்களில் ஒருவரான ராமதாஸுக்கு சரஸ்வதி என்ற மனைவி இருப்பதும் அவருக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதும் அனைவரும் அறிந்ததே. ஆனால் திடீரென ஒரு 60 வயது மதிக்கத்தக்க பெண்ணுடன் ராமதாஸ் மாலையும் கழுத்துமாக இருந்த புகைப்படம் வெளியாகி பகீர் கிளப்பியது. 

அத்தோடு அந்த பெண்மணி தாலி எப்போது கட்ட போகிறீர்கள் என ராமதாசை பார்த்து கேட்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை கூட்டியது. இதனிடையே தான் ராமதாஸுடன் இருக்கும் பெண்மணி குறித்து பல அதிர்ச்சி தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. ராமதாஸ் மருத்துவராக பணியாற்றிய காலத்தில் டோக்கன் கொடுக்கும் பணியாளராக அறிமுகமானவர் தான் சுசீலா. 16 வயதில் பணிக்கு வந்த சுசீலாவுடன் ஏற்பட்ட பழக்கம் தான் நாளடைவில் இருவரையும் நெருக்கமாக்கியதாகவும் அதன் பொன்விழா ஆண்டைத்தான் இருவரும் கேக் வெட்டி கொண்டாடியதாகவும் கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன. 

இதையும் படிங்க: அன்புமணி சஸ்பெண்ட்? ராமதாஸ் தரப்பு கொடுத்த கெடு முடிஞ்சது…

பாமகவில் எப்போதெல்லாம் சலசலப்பு ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் அடிபடுவதும் சுசீலாவின் பெயரும் அடிப்பட்டு வந்தது.  பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் காலத்தில் ராமதாஸ் உடைய கிளினீக்கில் டோக்கன் போடும் வேலை செய்து வந்ததாகவும், அவரை ராமதாஸ் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு விஸ்வகர்மா என்ற பெயரில் ராமதாஸ் அறக்கட்டளை ஒன்றையும் வைத்துக் கொடுத்திருக்கிறாராம். அந்த அறக்கட்டளையில் பல்லாயிரம் கோடி மதிப்பிலான சொத்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே தற்போது அன்புமணி - ராமதாஸ் இடையே மோதல் வெடிக்க சுசீலா தான் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கட்சியில் மூக்கை நுழைத்து சுசீலா ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும், அதுவே தற்போதைய பிரச்சனைகளுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.  அன்புமணி ராமதாஸ் தலைவர் ஆவதற்கு முன்பு தனது லாபியில் வேட்பாளர்களையும் கட்சி நிர்வாகிகளையும் நியமித்து வந்த சுசீலாவுக்கு அன்புமணி தலைமையில் சிறிதும் விருப்பமில்லை என சொல்லப்படுகிறது. எனவேதான் ராமதாஸை ஆட்டி படைத்து கட்சியில் அன்புமணியவே ஓரம் கட்ட திட்டம் தீட்டப்பட்டதாகவும் கூறி ஷாக் கொடுக்கின்றனர் அன்புமணி ஆதரவாளர்கள். 

இதனிடையே சுசீலா தனது இருப்பை உணர்த்தவும் தனக்கான அங்கீகாரத்தை பெறவுமே திட்டமிட்டு ராமதாஸ் உடனான தனிப்பட்ட புகைப்படங்களை லீக் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக ஈசிஆரில் நடைபெற்ற ராமதாஸ், சுசீலா ஜோடியின் பொன்விழா ஆண்டு காதல் கொண்டாட்டத்திற்கு மிக மிக நெருக்கமானவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அதுவும் செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டபோதும் எப்படி இந்த புகைப்படங்கள் வெளியாகி இருக்கும் என்றும் அன்புமணி தரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர். 

அதுமட்டுமன்றி வன்னியர் சங்க அறக்கட்டளை பணத்தை முறைக்கேடாக கையாண்டு சுசீலா தான் சார்ந்த விஸ்வகர்மா சமூக சங்கம் ஒன்றுக்கு செலவிட்டதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை அன்புமணி தரப்பினர் முன் வைக்கின்றனர். ராமதாஸ், சுசீலா விவகாரம் பொதுவழிக்கு வந்தது அன்புமணி தரப்பினரால் தான் என அடித்து கூறும் ராமதாஸ் தரப்பினர், திட்டமிட்டு கட்சிக்கும் ராமதாஸுக்கும் அவப்பெயரை உருவாக்கவே இதுபோன்ற வீடியோக்கள் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதாகவும் சாடுகின்றனர். 

தேவையின்றி ராமதாஸின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பதாகவும், பழி தீர்ப்பதற்காக ராமதாஸை கொச்சைப்படுத்தி தங்களின் அரசியல் எதிர்காலத்தையும் வீணாக்கி கொள்வதாகவும் ராமதாஸ் தரப்பினர் கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர். சுசீலாவுடனான ராமதாசின் புகைப்படம் வெளியான நொடி முதல் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், கட்சியின் எதிர்காலம் என்னவாகுமோ என தொண்டர்கள் கலக்கம்அடைந்துள்ளனர். 

இதையும் படிங்க: பாமகவில் இருந்து அன்புமணி தற்காலிக சஸ்பெண்ட்?... சாட்டையை சுழற்ற முடிவெடுத்த ராமதாஸ்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share