×
 

அதிமுக கூட்டணியால் பாஜகவுக்கு எதுவுமே சாதகம் இல்லை!! எடப்பாடி பழனிசாமியின் ராஜதந்திரம்!!

தொகுதி ஒதுக்கீட்டில் துவங்கி எதிர்காலம் வரை, அ.தி.மு.க., கூட்டணியால், பா.ஜ.,வுக்கு எதுவுமே சாதகமாக இல்லை என்று தெரிகிறது.

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி பாஜகவுக்கு எந்த அளவுக்கு சாதகமாக இருக்கும் என்ற கேள்வி இப்போது பெரும் விவாதமாக உள்ளது. தொகுதி ஒதுக்கீட்டில் தொடங்கி எதிர்கால அரசியல் வரை, இந்த கூட்டணி பாஜகவுக்கு பெரிய லாபத்தை தராது என்று அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

கடந்த 2024 லோக்சபா தேர்தலில் அதிமுக 20.46 சதவீத வாக்குகளும், தனித்து நின்ற பாஜக 11.24 சதவீத வாக்குகளும் பெற்றது. இந்த வாக்கு விகிதத்தை அடிப்படையாகக் கொண்டால், பாஜகவுக்கு குறைந்தபட்சம் 40 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். 

ஆனால் அதிமுக 27 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கியது. அதாவது ஆறு தொகுதிகளுக்கு ஒன்று என்ற விகிதத்தில் பாஜக ஏற்றுக்கொண்டது. இது பாஜகவுக்கு தேர்தலுக்கு முன்பே ஏற்பட்ட அரசியல் நஷ்டம் என்று பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அதிமுக மாஜி அமைச்சர்களுக்கு குறி! நக்சல் ஆதரவு அமைப்பு திட்டம்!! போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு!

வாசன் த.மா.கா. உள்ளிட்ட சில கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிட்டாலும், பாஜகவின் ஒட்டுமொத்த வாக்கு சதவீதம் 4 முதல் 5 சதவீதத்துக்குள் மட்டுமே இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

தற்போதைய திமுக ஆட்சியை பார்க்கும்போது, பாஜகவுக்கு எதிரான பல அதிரடி நிலைப்பாடுகளை ஸ்டாலின் அரசு சாமர்த்தியமாக தவிர்த்து வருகிறது. பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு, சென்னை-சேலம் எட்டுவழிச் சாலை திட்டம், பிரதமர் மோடிக்கு எதிரான கருப்புக்கொடி போராட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் திமுக மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறது.

ஆனால் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த காலத்தில் நெடுவாசல், கதிராமங்கலம், ஸ்டெர்லைட், எட்டுவழிச் சாலை, நீட் தேர்வு எதிர்ப்பு, ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் உள்ளிட்ட பல விவகாரங்களில் பாஜகவின் வளர்ச்சியை திட்டமிட்டு தடுத்ததாக கூறப்படுகிறது. 2019 லோக்சபா தேர்தலிலும் அதிமுக தனக்கு தேவையான இடங்களில் மட்டுமே கவனம் செலுத்தியதே தவிர, பாஜக கூட்டணி கட்சிகளுக்கு உதவ முயற்சி எடுக்கவில்லை என்று விமர்சனம் எழுந்தது.

இப்போது அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பாஜக தமிழகத்தில் தனது கட்சி வளர்ச்சிக்கான எந்த பெரிய அரசியல் உத்தியையும் முன்னெடுக்க முடியாது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் பழனிசாமியும் அதையே செய்வார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

2029 லோக்சபா தேர்தலை மனதில் வைத்து பார்க்கும்போது, திமுக ஆட்சியில் இருந்தால் பாஜகவால் நீட், கல்விக் கொள்கை, சட்டம் ஒழுங்கு, தேசிய பாதுகாப்பு போன்ற விவகாரங்களில் அழுத்தம் கொடுக்க முடியும். அரசியல் ரீதியாகவும் திமுகவை எதிர்த்து தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளலாம்.

எனவே, குறைந்த தொகுதிகளை ஏற்றுக்கொண்டதன் மூலம் அதிமுக தனது 20 சதவீத வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்ள பாஜகவே வழிவகுத்துக் கொடுத்துள்ளது என்று கூறப்படுகிறது. இந்த கூட்டணியால் பாஜகவுக்கு சில சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைக்கலாம். ஆனால் நீண்டகால அடிப்படையில் பார்க்கும்போது, இந்த கூட்டணி தோல்வியடைவதே தமிழக பாஜகவின் எதிர்கால வளர்ச்சிக்கு நல்லது என்று சில அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: இபிஎஸ் பேச்சை கண்டுகொள்ளாத மா.செ-க்கள்!! அதிமுகவில் நிலவும் அதிருப்தி! சுணங்கும் தேர்தல் பணி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share