அண்ணாமலையை கைவிட்ட குலசாமி & பழனிசாமி... தேர்தலில் இருந்து விலகிய பரபரப்பு பின்னணி...!
தமிழக தேர்தல் களம் எதிர்கொள்ளும் முக்கிய கேள்வி அண்ணாமலை ஏன் போட்டியிடவில்லை? புறக்கணித்தாரா அல்லது புறக்கணிக்கப்பட்டாரா என்பதுதான் விசாரித்தால் தகவல்கள் கொட்டுகின்றன.
தமிழகம் முழுக்கவே பாஜாகாவில் அண்ணாமலை ஆதரவு அன்பு கூட்டம் பரவலாக இருந்தாலும் கொங்கு மண்டலத்தில் தான் அது கொஞ்சம் அதிகம். அதனால்தான் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் ஏதோ ஒரு தொகுதியில் அவர் போட்டியிட கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அண்ணாமலை ரேசிலேயே இல்லை. அதன் பின்னணி என்னவென்று பாஜகாவின் தலைமை நிர்வாகிகள் மற்றும் அரசியல் விமர்சகள் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அண்ணாமலையை ஒதுக்கிவிட்டு தமிழக பாஜகவின் வளர்ச்சி கிராபை வரைய முடியாது. அதிரடியாக செயல்பட்டு கட்சியை வளர்த்தார். பல வருடங்களாக தமிழக பாஜகவில் கோலோச்சி கொண்டிருந்த சீனியர் மோஸ்ட் நிர்வாகிகளில் பலரையும் ஓரம் கட்டினார். ஆனால் காலப்போக்கில் சூழல் தலைக்கீழானது. அதாவது உடைக்காத சீனியர்களை நீக்கிட அண்ணாமலை பயன்படுத்திய இளம் கருவிகள் எல்லாம் சர்ச்சை மன்னர்கள் என்பது ஆதாரங்களோடு வெளியிடப்பட்டது.
அமர் பிரசாத், சூர்யா என பலர் மீது பல்வேறு புகார் மழை இவர்களுக்கு கை கொடுத்தால் தன் பெயரும் கெடும் என்று மலை ஒதுங்கி கொள்ள ஒரு கட்டத்தில் அவரது தீவிர ஆதரவாளர்களே அவருக்கு எதிரியாக மாறினர். கூட்டணிக்குள் வைத்துக்கொண்டே மூர்க்கமாக விமர்சித்ததால் அதிமுக பிரிந்து சென்றது. தனித்து நின்று 2024 நாடாளுமன்ற தேர்தலில் கடும் தோல்வி என்று அண்ணாமலையின் மூவால் பாஜக தடுமாற துவங்கிய நிலையில் அவர் மாநில தலைமையிலிருந்து இறக்கப்பட்டார். இந்த சூழலில் தான் கோவை, பெங்களூருவில் உள்ள அண்ணாமலையின் சொத்துக்கள், மெகா பிசினஸ் தகவல்கள் வெடித்து கிளம்பின.
தமிழக மக்கள் தொடங்கி பாஜக தேசிய தலைமை வரை இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் பின்னணியில் அவரால் சில வருடங்களுக்கு முன் கட்டம் கட்டப்பட்ட சீனியர்களின் கைவரிசை இருந்தது. அரசியல், பர்சனல் என இரண்டிலும் அதிரடி வளர்ச்சியை கண்ட அண்ணாமலை அதே வேகத்தில் சரிவை சந்தித்த பின் சற்று நிதானமானார். பாஜகவில் தன்னை மீண்டும் நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சிகளில் ஒன்றாக அதிமுகவில் வேலுமணியின் நட்பை பலப்படுத்திக் கொண்டார். அதிமுக பாஜக்க கூட்டணி மீண்டும் உருவானதற்கு அடிப்படையே வேலுமணி மகன் திருமண நிகழ்வுதான். முன்பு இலை தாமரை கூட்டணி முறிவுக்கு காரணமே எடப்பாடியை அண்ணாமலை ஓவராக உரசியதுதான். ஆனால் கூட்டணி மீண்டும் முடிவான பிறகும் பழையவற்றை மறக்க எடப்பாடி தயாரில்லை. எங்கே தன்னிடத்தில் வேலுமணியை உட்கார வைத்து விடுவார்களோ எனும் அச்சத்தில்தான் கூட்டணியை மீண்டும் உறுதி செய்தார் எடப்பாடி. ஆனால் இப்போது வரை வேலுமணி அண்ணாமலையின் பிணைப்பு அவருக்கு எரிச்சலாகத்தான் உள்ளது. அதை பற்றி கவலைப்படாத மலை மற்றும் மணி அடுத்த மூவுக்கு தயாரானார்கள்.
இதையும் படிங்க: பழனிசாமியா? கந்தசாமியா?... கன்ஃபியூஸ் ஆன அண்ணாமலை...அதிமுகவினர் அதிர்ச்சி...!
திமுகவில் இருவரின் பொது எதிரியான செந்தல் பாலாஜி கரூரிலிருந்து கோவைக்கு முகாம் மாறுவதை முன்னதாகவே ஸ்மெல் செய்துவிட்டனர். அதனால் கோவையில் ஒரு தொகுதியில் அண்ணாமலை போட்டியிட முடிவு செய்தார். கிணத்துக்கடவு தொகுதியை தனது மெயின் சாய்ஸ் ஒன்றாக வைத்தார். ஆனால் இதை ஸ்மெல் செய்த எடப்பாடி கோவையில் நின்று வென்று கொங்கு தலைநகரில் அண்ணாமலையும் வேலுமணியும் இணைந்து ஒரு சக்தியாக உருவெடுப்பதை விரும்பவில்லை. அதனால் கோவையில் பாஜாகவுக்கு ஒரு தொகுதிதான். அது கோவை வடக்கு மட்டுமே என்று செக் வைத்தார். ஏற்கனவே கோவை தெற்கில் பாஜக எம்எல்ஏவாக வானதி இருக்கிறார். கமல் ஹாசனையே தோற்கடித்தவர் எனும் பெயர் இருப்பதால் அவருக்கே அந்த ஒரு தொகுதியை கண்டிப்பாக தேசிய தலைமை கொடுத்தே தீரும் என்பது எடப்பாடியின் நம்பிக்கை விளைவு.
கோவையில் அந்த ஒற்றை தொகுதியும் மலையின் கைகளை விட்டு போனது. அதனால் திருப்பூர் ஈரோடு அல்லது கரூரில் நின்று கொங்கு மண்டலத்தில் எம்எல்ஏவாகிவிட்டு மீண்டும் லாபியை துவங்கலாமா என்று பிளான் பண்ணினார் மலை. கடவுள் நம்பிக்கை அதிகமுள்ள அவர் தன் குலதெய்வத்திடம் சம்மதம் கேட்கவும் முடிவெடுத்தார். கடந்த மாதம் சின்னதாராபுரம் அருகே உள்ள தன் குலதெய்வமான அருங்கரை அம்மன் கோவிலுக்கு சென்று பூ கட்டி சகுனம் பார்த்துள்ளார். சகுனம் சரியாக இல்லை என்று பதில் வந்தது. அப்செட்டான அண்ணாமலை தொகுதியை தேர்ந்தெடுப்பதில் சரியான நிலைபாடு எடுக்க முடியாமல் தவித்தார். கடவுள் உத்தரவை மீறி போவதற்கும் அவருக்கு மனமில்லை. காரணம் ஏற்கனவே துவக்கத்தில் ரங்கமலை உச்சியில் உள்ள மல்லீஸ்வரனை பௌர்ணமி நாட்களில் வணங்கினால் நிச்சயம் அரசியலில் ஜெயிக்கலாம் என்று ஜாதகம் சொன்னதால் தவறாமல் சில மாதங்கள் நெருங்கிய சில நண்பர்களை கூட்டிக்கொண்டு 2 கிலோ மீட்டர் மலை ஏறி வந்து மல்லீஸ்வரனை வணங்கினார்.
ரங்கமலை பூசாரியும் நீங்கள் அரசியலில் பெரிய நிலைக்கு வருவீர்கள் என்று அருள்வாக்கு சொன்னார். அது பழித்து உண்மையிலேயே அரசியலில் பெரிய நிலைக்கு வந்தார். ஆனால் இப்போது தேர்தலில் போட்டியிட்டால் 2021 அரவக்குறிச்சி சட்டமன்றம் 2024 கோவை நாடாளுமன்றம் போல் இந்த 2026ல் மீண்டும் தோல்வியே கிடைக்கும் என சின்னதாராபுரம் குலதெய்வ கோவில் மற்றும் ரங்கமலை மல்லீஸ்வரன் கோவில் பூசாரி ஆகியோர் அழுத்தி சொன்னதாலேயே தேர்தல் ரேசிலிருந்து விலக்கியுள்ளார் அண்ணாமலை எனக்கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நெருங்கிய தேர்தல்..! வேட்பாளரை ஆதரிக்க சென்ற அண்ணாமலை ஹெலிகாப்டரில் தீவிர சோதனை..! பதற்றம்..!!