பிளாக்மெயில் செய்து பணிய வைக்கலாம்னு நினைக்காதீங்க! ஜாமின் ரத்து வழக்கில் சவுக்கு சங்கருக்கு கோர்ட் கண்டிப்பு!!
கோர்ட்டை ‘பிளாக்மெயில்’ செய்து பணிய வைக்க முடியாது. தனி நபர்கள் குறித்து நாங்கள் சிறிதும் கவலைப்படுவதில்லை.
சென்னை: யூடியூபர் சவுக்கு சங்கர் ஜாமின் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட சங்கருக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய கோரி போலீஸ் தரப்பு மனு செய்த நிலையில், நீதிபதிகள் முன் நேற்று (ஜனவரி 19, 2026) விசாரணை நடந்தது.
சங்கர் தரப்பில், "இந்த அமர்வு ஜாமின் ரத்து மனுவை விசாரித்தால் பாரபட்சம் காட்டப்படும்" என்று கூறி, வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற கோரிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை கேட்ட நீதிபதி பி.வேல்முருகன் கடும் கோபத்துடன் பதிலளித்தார்.
நீதிபதி வேல்முருகன் கூறியதாவது: "நீதிபதிகளை தேர்ந்தெடுத்து வழக்கு நடத்த முடியாது. இது போன்ற மனுக்களை விசாரணைக்கு ஏற்க மாட்டேன். கோர்ட்டை ‘பிளாக்மெயில்’ செய்து பணிய வைக்க முடியாது. தனி நபர்கள் குறித்து நாங்கள் சிறிதும் கவலைப்படுவதில்லை.
இதையும் படிங்க: சிறையில் நடந்த சித்ரவதைகள்!! வாழ விட மாட்டார்கள்! அவங்க ப்ளானே இதுதான்! சவுக்கு சங்கர் கோவம்!
கோர்ட்டை ‘பிளாக்மெயில்’ செய்து பணிய வைக்க முடியாது. தனி நபர்கள் குறித்து நாங்கள் சிறிதும் கவலைப்படுவதில்லை. நீதித்துறை வாழ்க்கையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளேன். எந்த வழக்கிலிருந்தும் விலகியதில்லை. இந்த வழக்கிலிருந்தும் விலக மாட்டேன்.
தலைமை நீதிபதியிடமிருந்து நிர்வாக உத்தரவு பெற்றால் மட்டுமே இந்த வழக்கை விசாரிக்க மாட்டோம். இல்லையென்றால், மனுவுக்கு பதில் அளித்தாலும் இல்லையென்றாலும், வழக்கின் தகுதி அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்படும்."
இதனால் சங்கர் தரப்புக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. நீதிபதிகள் பி.வேல்முருகன் மற்றும் எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு விசாரணையை தள்ளிவைத்தது. சவுக்கு சங்கர் வழக்கு தொடர்பாக ஏற்கனவே 2025 டிசம்பர் 27-ஆம் தேதி 3 மாத இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. அதை ரத்து செய்ய சைதாப்பேட்டை இன்ஸ்பெக்டர் தரப்பு மனு செய்தது. இப்போது நீதிபதியின் கடும் எச்சரிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நீதித்துறையின் சுதந்திரத்தை வலியுறுத்திய நீதிபதி வேல்முருகனின் இந்த கருத்து பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. வழக்கின் அடுத்த கட்ட விசாரணை எப்போது நடக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: கதவை உடைத்து தூக்கிய போலீஸ்! அசால்டாக வெளியே வந்த சவுக்கு சங்கர்!! வைரலாகும் வீடியோ!