#BREAKING: ஆசியக் கோப்பை தொடர்! சூரியகுமார் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி.. பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஆசியக் கோப்பை முதன்முதலில் 1984 ஆம் ஆண்டு ஷார்ஜாவில் தொடங்கப்பட்டது. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் முயற்சியால் கிரிக்கெட்டை ஆசிய கண்டத்தில் பிரபலப்படுத்துவதற்காக இந்தத் தொடர் உருவாக்கப்பட்டது. முதல் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய மூன்று அணிகள் மட்டுமே பங்கேற்றன. இந்தியா இதுவரை எட்டு முறை (1984, 1988, 1990-91, 1995, 2010, 2016, 2018, 2023) கோப்பையை வென்று மிகவும் வெற்றிகரமான அணியாக உள்ளது. 2016 முதல், இந்தத் தொடர் ஒருநாள் மற்றும் டி20 வடிவங்களில் மாறி மாறி நடத்தப்படுகிறது, இது அடுத்து வரவிருக்கும் ஐசிசி உலகக் கோப்பை வடிவத்தைப் பொறுத்து அமைகிறது. 2023 ஆம் ஆண்டு தொடர் ஒருநாள் வடிவத்தில் நடைபெற்றது, இதில் இந்தியா இலங்கையை இறுதிப்போட்டியில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
2025 ஆசியக் கோப்பை தொடரில் மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கின்றன. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் முழு உறுப்பினர்களான ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. இவர்களுடன், 2024 ஆம் ஆண்டு ACC ஆண்கள் பிரீமியர் கோப்பையில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகளும் இந்தத் தொடரில் இடம்பெறுகின்றன.
ஆசியக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் ஒன்பதாம் தேதி தொடங்கி செப்டம்பர் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சூரியகுமார் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் சுப்மன் கில் இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்ஷர் பட்டேல், ஜிதேஷ் ஷர்மா, பும்ரா அணியில் இடம் பிடித்துள்ளனர். மேலும், ஹர்ஷீத் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்திப் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங் ஆகியோரும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
இதையும் படிங்க: இனி மஜா தான்.. மதுரையில் விஜய்.. மாநாட்டு பணிகள் மும்முரம்! தொண்டர்கள் செம குஷி..!
இதையும் படிங்க: அடுத்த 48 மணி நேரம் ரொம்ப முக்கியம்!! கனமழையால் தவிக்கும் மும்பை.. முதல்வர் பட்னாவிஸ் அட்வைஸ்!!