இந்தியாவுடன் விளையாட மாட்டோம்! பாகிஸ்தான் பிரதமர் அதிரடி அறிவிப்பு!
டி20 உலகக்கோப்பையில் வங்கதேசத்திற்கு ஆதரவாக இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை 2026 தொடரில், இந்திய அணிக்கு எதிரானப் போட்டியில் மட்டும் பாகிஸ்தான் விளையாடாது என அந்நாட்டுப் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். விளையாட்டில் அரசியல் கலக்கக் கூடாது என்றாலும், தற்போதையச் சூழலில் இந்தப் புறக்கணிப்பு அவசியமானது என அவர் தனது அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு காரணங்களைக் காட்டி இந்தியாவில் விளையாட மறுத்த வங்கதேச அணி, உலகக்கோப்பையிலிருந்து நீக்கப்பட்டதற்குப் பாகிஸ்தான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. வங்கதேசத்திற்குத் தங்களது ஒருமைப்பாட்டைக் காட்டும் விதமாகவே இந்தியாவுடனானப் போட்டியை மட்டும் புறக்கணிப்பதாகப் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்கும், ஆனால் பிப்ரவரி 15-ஆம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரானப் போட்டியில் மட்டும் களம் இறங்காது என்று பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் கூறியுள்ளார். இது கொள்கை ரீதியான முடிவு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: விஸ்வரூபம் எடுத்த ஜெகதீசன்! அமெரிக்காவை வீழ்த்தி இந்தியா ‘A’ அணி அபார வெற்றி!
ஒரு குறிப்பிட்டப் போட்டியை மட்டும் புறக்கணிப்பது விளையாட்டு தர்மத்திற்கு எதிரானது எனச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த முடிவால் பாகிஸ்தானுக்குக் கிடைக்க வேண்டிய சுமார் ரூ. 300 கோடி வருவாயை நிறுத்தி வைக்கவும், அந்நாட்டிற்கு அபராதம் விதிக்கவும் ஐசிசி திட்டமிட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையிலானப் போட்டி நடைபெறாவிட்டால், கிரிக்கெட் உலகிற்குப் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும்:
பாகிஸ்தான் அணி விளையாட வராத பட்சத்தில், இந்திய அணிக்கு விளையாடாமலேயே 2 புள்ளிகள் வழங்கப்படும். இந்த புறக்கணிப்பால் பாகிஸ்தான் அணியின் நிகர ரன் ரேட் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அந்த அணி அடுத்தச் சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்படும். நாங்கள் ஒப்பந்த வீரர்கள், அரசாங்கம் சொல்வதைக் கேட்க வேண்டியக் கடமையில் இருக்கிறோம் எனப் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "T20 World Cup-ல் ட்விஸ்ட்!" வேற ஊர்ல வைங்க! - இந்தியா வராமல் அடம் பிடிக்கும் வங்கதேசம்.. ஷாக் ஆன ICC!