×
 
☰

தனியார் பள்ளிகளிடம் 100 கோடி மோசடி.. திமுக தலையில் இறங்கியது பேரிடி... 7 பைகளில் கட்டுக் கட்டாய் சிக்கிய முக்கிய ஆவணங்கள்...!!

பிடி அரசகுமார் வீட்டில் நடைபெற்ற மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் சோதனை நிறைவு பெற்றுள்ளது. சோதனையின் முடிவில் ஏழு பைகளில் முக்கிய ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிடி அரசகுமார் வீட்டில் நடைபெற்ற மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் சோதனை தற்போது நிறைவு பெற்றுள்ளது. அவரது வீட்டிற்கு வந்திருந்த 15 மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள், தங்களது கைகளில் ஏழு பைகளுடன் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாக, பிடி அரசகுமார் மீது ஏற்கனவே ரூ.100 கோடி வரை குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் அவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர் விசாரணை நடத்தி, பிடி அரசகுமாரைத் தொடர்ந்து சுரேஷ் மற்றும் ராஜா ஆகியோரையும் கைது செய்துள்ளனர். தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக அப்போது அமைச்சராக இருந்த அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ரூ.100 மோசடி விவகாரத்தில் அதிரடி... அரசகுமார் மகன், மகள் வீடுகளில் களமிறங்கியது CCB... காரணம் என்ன?

இந்த வழக்கு தொடர்பாக செப்டம்பர் 16ஆம் தேதி, அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்குச் சொந்தமான சென்னையில் உள்ள வீடு, திருச்சியில் உள்ள வீடு, அலுவலகம் உள்ளிட்ட 9 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் 118 மின்னணு ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக அப்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் செய்திக்குறிப்பு வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில், விசாரணையில் தேடப்பட்டு வரும் தலைமறைவு குற்றவாளியாகக் கருதப்படும் முத்துக்குமார் என்பவர் தியாகராய நகரில் நடத்தி வரும் குளோபல் 360 என்ற நிறுவனத்திலும், அவர் தொடர்புடைய இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது நடைபெற்ற சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள், கிட்டத்தட்ட 30 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கடந்த 26ஆம் தேதியும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் செய்திக்குறிப்பு வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் இன்று காலை முதல் பிடி அரசகுமாரின் வீடு, அவரது மகன் வீடு, மகள் வீடு உள்ளிட்ட சென்னையில் மட்டும் 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

தற்போது, அவரது வீட்டில் காலை முதல் சுமார் 15 அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நிறைவு பெற்றுள்ளது. சோதனையின் முடிவில், அதிகாரிகள் ஏழு பைகளில் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பள்ளிக்கல்வித்துறையில் யார் யாரிடம், எந்தெந்த பள்ளி நிர்வாகத்திடம் இருந்து எவ்வளவு கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டது, அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி யாரிடம் பொய்யான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன என்பது தொடர்பான ஆவணங்களே தற்போது எடுத்துச் செல்லப்பட்டதாக காவல்துறையினர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: “சத்தியபாமாவுக்கு அந்த உரிமையே கிடையாது”... “விஜய்க்கு அந்த விஷயம் தெரியும்” - தவெகவுக்கு இடியை இறக்கிய ஆர்.பி.உதயகுமார்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share