ரூ.100 மோசடி விவகாரத்தில் அதிரடி... அரசகுமார் மகன், மகள் வீடுகளில் களமிறங்கியது CCB... காரணம் என்ன?
தனியார் பள்ளிகளிடம் 100 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்ட அரசகுமாரன் மகள் மற்றும் மகன் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
தனியார் பள்ளிகளிடம் 100 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் தரப்பில விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த வழக்கில் ஏற்கனவே அரசகுமார் உட்பட மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கக்கூடிய நிலையில், இந்த வழக்கில் முத்துக்குமார் என்பவர் தொடர்ச்சியாக தலைமறைவாக இருந்து வருகிறார்.
அவருக்கு எதிராக லுக்வுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடர்புடைய இடங்களில் ஏற்கனவே சோதனையானதும் மேற்கொள்ளப்பட்டது. அது தொடர்பாக வழக்கு பதிவும் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது பி.டி.அரசகுமாரோட மகன் மற்றும் மகள் ஆகியோருக்கு சொந்தமான இடங்களல் மத்திய குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனையை காலை முதலே மேற்கொண்டு வருகின்றனர்.
ஓஎம்ஆர் சாலையில் இருக்கக்கூடிய அவர்களுடைய வீடு உள்ளிட்ட சில இடங்களல் இந்த சோதனையானது மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்த வழக்கில் அரசுகுமார் என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருக்கக்கூடிய நிலையில் அவருக்கு தொடர்புடைய இடங்களில் இந்த சோதனையில் ஏதாவது சிக்குமா என்ற கோணங்களிலும் இந்த விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: கவின் ஆணவக் கொலை வழக்கில் திடீர் திருப்பம்... சுர்ஜித் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து..! கோர்ட் அதிரடி உத்தரவு..!
ஏற்கனவே அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அந்த ஆவணங்களை அடிப்படையாக வைத்துதான் அவருடைய உதவியாளர் மற்றும் அவருக்கு நெருக்கமானோர் உள்ளிட்டோருக்கு சம்மன் கொடுக்கப்பட்டு அவர்களை நேரில் அழைத்து விசாரணையானது மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில தற்போது சோதனையானது ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அந்த ஆவணங்களை அடிப்படையாக வைத்துதான் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏதேனும் ஆவணங்கள் சிக்குகின்றனா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க முடியும். இந்த சோதனை நிறைவுற்ற பின்னரே அந்த கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்படும் என மத்திய குற்றப்பிரிவு போலீசார் தரப்பில தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: “அந்த 4 பேர் தமிழ்நாட்டை விக்கிறாங்க...” - ரெட்டி கேங்கை புட்டு புட்டு வைத்த அப்பாவு... தவெக அரசுக்கு ஆப்பு...!