×
 

மீண்டும் இலங்கை கடற்படை அட்டகாசம்! ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கைது!

ராமேஸ்வரம் மீனவர்களை 10 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் இன்று சிறைபிடித்துள்ளனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்து அவர்களின் படகும் பறிமுதல் செய்துள்ள சம்பவம் மீன்வர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அத்துமீறல் தொடர்கதையாகி வரும் நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழ்வாதாரத்திற்காகக் கடலுக்குச் சென்ற மீனவர்கள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையேயான கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களைச் சுற்றிவளைத்து இந்தப் பாரபட்சமான நடவடிக்கையை எடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் ராமேஸ்வரம் மற்றும் சுற்றுவட்டார மீனவக் கிராமங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நேற்று கடலுக்குச் சென்ற நூற்றுக்கணக்கான விசைப்படகுகளில், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும் அதிலிருந்த 10 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் வழிமறித்தனர். "எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தீர்கள்" என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, மீனவர்களின் விசைப்படகைப் பறிமுதல் செய்த கடற்படையினர், 10 மீனவர்களையும் கைது செய்து நெடுந்தீவு கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து அவர்கள் காரைநகர் கடற்படைத் தளத்திற்கு மாற்றப்பட்டு, தற்போது தீவிர விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் சிறைபிடிப்பு..!! தொடரும் இலங்கை கடற்படையின் அராஜகம்..!!

முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, கைதான மீனவர்கள் அனைவரும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களை விரைவில் அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான ஆயத்தப் பணிகளில் இலங்கை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் திருநாளுக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில், குடும்பத்திற்காகப் பணம் ஈட்டக் கடலுக்குச் சென்ற மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட செய்தி கேட்டு, அவர்களின் உறவினர்கள் கண்ணீருடன் கடற்கரையில் குவிந்துள்ளனர். மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு, மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவச் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.


 

இதையும் படிங்க: “கண்ணீரில் மீனவக் கிராமங்கள்!”  ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் கைது; இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share