10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!
10 மற்றும் 11 ஆம் பொது தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வி அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்ற மாவட்டமாக சிவகங்கை முதலிடத்தை பிடித்தது விருதுநகர் மாவட்டம் இரண்டாம் இடத்திலும் கன்னியாகுமரி மூன்றாம் இடத்தில் உள்ளது. மொத்தமாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 93.80 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 91.74 சதவீதமும் மாணவிகள் 95 புள்ளி 88 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த பொது தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே 4.14 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் மொழிப்பாடத்தில் எட்டு மடவாளர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் 8 பேரும், ஆங்கிலத்தில் 346 பேரும், கணிதத்தில் 1,996 பேரும், அறிவியலில் 10,838 பேரும், சமூக அறிவியல் 10 ஆயிரத்து 256 பேரும் சதம் அடித்துள்ளனர். results.digilocker.gov.in, www.tnresults.nin.in என்ற இணையதள முகவரயில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகள் கூடுதலாக 7.56 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், இரு பாலர் பயிலும் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளை விட 6.22 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பொள்ளாச்சி வழக்கை போல அண்ணா பல்கலை. வழக்கிலும் போராடுங்கள்... அண்ணாமலை வலியுறுத்தல்!
பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வில் 92.09% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.70% மாணவர்கள் 95 புள்ளி 13 சதவீதமும் 11ஆம் வகுப்பு தேர்வு தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல பதினோராம் வகுப்பு பொது தேர்வில் மாணவர்களை விட மாணவிகளை அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10,11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூலை 4 ஆம் தேதி முதல் துணைத்தேர்வு நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அமைச்சர் சுவாமிநாதனுக்கு திடீர் உடல் நலக்குறைவு... தனியார் மருத்துவமனையில் அனுமதி..!