×
 

#BREAKING பாலியல் தொல்லையால் +1 மாணவி தற்கொலை... 26 நாட்களாக தலைமறைவாக இருந்த இளைஞர் கைது...!

அந்தியூரில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில்,  இன்ஸ்டாகிராமில் பழகி மிரட்டல் விடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையத்தை சேர்ந்த 16 வயது +1 மாணவி கடந்த மாதம் 22ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய இளைஞர் மிரட்டியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் புகார் அளித்தனர். 

புகார் மீது 26 நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்றூ ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மாணவியை செல்போனில் மிரட்டிய புகாரில்,  விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த தனியாளம்பட்டு கிராமத்தை சேர்ந்த 18 வயது இளைஞர் சதீஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

இதையும் படிங்க: திரையுலகில் மாபெரும் அதிர்ச்சி! பிரபல தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை!

 அலைபேசியை அணைத்துவிட்டு, தலைமறைவாக இருந்துவந்த நிலையில்,  விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கீழ் தனியாளம்பட்டு என்ற கிராமத்தில் மேற்படி சதீஷ் என்பவர் தனிப்படையினரால் பிடிக்கப்பட்டு, விசாரணைக்காக அந்தியூர் காவல் நிலையம் கொண்டு வரப்பட்டுள்ளார். 

தொடர்ந்து, விசாரணைக்குப் பின் அவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தற்கொலைக்கான காரணம் என்ன? 

தற்கொலைக்கு முன்பு மாணவி தாரணி தனது பெற்றோரிடம், இன்ஸ்டாகிராம் மூலம் கள்ளகுறிச்சியை சேர்ந்த இளைஞரிடம் பழகியதாகவும், அந்த இளைஞர் தற்போது பிரச்சனை செய்து வருவதாகவும் கூறியுள்ளார். அந்த இளைஞர் தன்னைத் தொடர்ந்து போனில் அழைத்து மிரட்டுவதாகவும், தனக்கு ஏதேனும் நேர்ந்தால் அவரே காரணம் என்றும் கூறி அழுதுள்ளார்.

மறுநாள் காலை மாணவியின் தந்தையையும் அந்த இளைஞர் போனில் ஆபாசமாகத் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி,பாட்டி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை  செய்து கொண்டார்.

இதையும் படிங்க: ரத்தான நீட் தேர்வு..!! விரக்தியில் மாணவன் எடுத்த விபரீத முடிவு..!! கதறும் பெற்றோர்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share