×
 

திருமணம் செய்வதாக கூறி 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர்... மகிளா நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 12 ஆயிரம் அபராதமும் விதித்து புதுக்கோட்டை மகளா நீதிமன்றம் தீர்ப்பு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கடந்த 2022ல் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தாக்குதல் செய்து கர்ப்பமாக வைத்து குழந்தையும் பிறந்து இறக்க காரணமாக இருந்த 26 வயது  இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 12 ஆயிரம் அபராதமும் விதித்து புதுக்கோட்டை மகளா நீதிமன்றம் தீர்ப்பு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கடந்த 2022ல் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தாக்குதல் செய்து அதனை வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு நெய்வேலி கிராமத்தைச் சேர்ந்த தற்போது புதுக்கோட்டை புலிவலம் அரசம்பட்டி பகுதியில் வசிக்கும் ஆபாவாணன் என்ற 26 வயது இளைஞர் மிரட்டியுள்ளார். இந்நிலையில் பாலியல் தாக்குதலுக்கு உள்ளான 16 வயது சிறுமி கர்ப்பமுற்ற நிலையில் கர்ப்பமுற்ற சில மாதங்களில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்து இறந்துள்ளது. 

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருமயம் அனைத்து மகளிர் காவல் துறையினர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆபாவாணனை கைது செய்திருந்தனர். 

இதையும் படிங்க: வாட்ஸ் அப்பில் ஆபாச போட்டோக்கள்... அங்கன்வாடி பெண் ஊழியருக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்த மதபோதகர் கைது

இந்நிலையில் தான் இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றவாளியாக உள்ள ஆபாவாணன் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 12 ஆயிரம் ரூபாய் அபராதம்  விதித்து  நீதிபதி கனகராஜ்  தீர்ப்பளித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து குற்றவாளி ஆபாவாணன் போலீசார் பாதுகாப்போடு திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளார். 

இதையும் படிங்க: “தயவு செஞ்சி என்னை விட்டுடுங்க...” - ஓடும் பேருந்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை... இதயத்தை நொறுக்கும் பெண்ணின் வாக்குமூலம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share