பட்டப்பகலில் பயங்கரம்...ஓட, ஓட விரட்டி 17 வயது சிறுவன் வெட்டிக்கொலை... குலை நடுங்க வைக்கும் காரணம்...!
புதுக்கோட்டை அருகே முன்விரோதத்தால் இளைஞர் வெட்டிக்கொலை - போலீஸ் விசாரணை
புதுக்கோட்டை மாவட்டம் பெருமாநாடு பகுதியில் முன்விரோதம் காரணமாக 17 வயது இளைஞர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், பெருமநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் அன்புச்செல்வன் (வயது 17). ஐடிஐ முடித்துவிட்டு ஓசூரில் பணியாற்றி வந்த இவர், கடந்த 2024-ஆம் ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த சத்யராஜ் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்.
இந்த வழக்கின் விசாரணைக்காக ஓசூரில் இருந்து பத்து நாள் விடுமுறையில் ஊருக்கு வந்ததாக கூறப்படுகிறது.நேற்று இரவு அன்புச்செல்வன் தனது நண்பர்களுடன் பெருமநாடு கிரஷர் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டினர். இதில் தலையிலும், கைகளிலும் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையும் படிங்க: பட்டப்பகலில் பயங்கரம்... மளிகை கடையில் தனியாக இருந்த பெண் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை... மர்ம நபர்களுக்கு வலைவீச்சு...!
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அன்னவாசல் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அன்புச்செல்வனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வெட்டி சரிக்கப்பட்ட கானா பாடகர்கள் - தமிழகத்தையே உலுக்கிய சம்பவத்தில் 2 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது...!