×
 

வெட்டி சரிக்கப்பட்ட கானா பாடகர்கள் - தமிழகத்தையே உலுக்கிய சம்பவத்தில் 2 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது...!

காஞ்சிபுரத்தில் இருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் பகுதியில் இரண்டு இளைஞர்கள் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஏழு பேரை தற்போது தனிப்படை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். சென்னை தாம்பரம் அருகேயுள்ள முடிச்சூர் வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த 25 வயதான பரத் மற்றும் 24 வயதான சீனு  இருவரும் இசை கச்சேரியில் கானா பாடல்கள் பாடும் வேலையை செய்து வருகின்றார்கள். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை படப்பை அருகே இசைக்கச்சேரியில் கானா பாடல் பாடிவிட்டு இரவு மணிமங்கலம் அருகே உள்ள அம்மனம்பாக்கம் பகுதியில் தனது நண்பர் லோகேஷ் என்பர் வீட்டில் இருவரும் தங்கி இருக்கிறார்கள். 

இந்நிலையில் தான் சனிக்கிழமை காலை 11:00 மணி அளவில் லோகேஷ் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 7 மர்ம நபர்கள் லோகேஷை தாக்க முயன்றனர். அங்கிருந்து அவர் தப்பி ஓடி இருக்கிறார். உடனடியாக அங்கு வீட்டில் தங்கி இருந்த பரத், சீனு ஆகிய இருவரையும் அந்த மர்ம நபர்கள் சரமாறியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த இருவரது உடலையும்  மணிமங்கலம் போலீசார் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோடு, இந்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். 

அந்த பகுதியில் இருக்கின்ற சிசிடிவி கண்காணிப்பு காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. தாம்பரம் மாநகர காவல் ஆணையர் சஞ்சய் குமார் உத்தரவின் பெயரில் நான்கு தனிப்படை போலீசார் இந்த குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். இந்நிலையில் தான் தற்போது இரண்டு சிறுவர்கள் உட்பட ஏழு பேரை தனிப்படை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். முடிச்சூர் பகுதியை சேர்ந்த பொட்டி என்ற குமரவேல் (20),  பழைய பெருங்குளத்தூர் பகுதியை சேர்ந்த 23 வயதான சந்தோஷ குமார், பல்லாவரம் பகுதியை சேர்ந்த 26 வயதான ஐயப்பன், பழைய பெருங்களூர் பகுதியை சேர்ந்த 19 வயதான வேலன், பீர்க்கங்கரனை பகுதியை சேர்ந்த 20 வயதான  கலைசெல்வன் ஆகிய ஐந்து பேர்  கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: கோவையை உலுக்கிய பயங்கரம்... 13 வயது சிறுவனை கொன்று புதைத்த சக வயது நண்பர்கள்... நடந்தது என்ன?

இவர்களுடன் 17 வயதுடைய இரண்டு சிறுவர்களும் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த கொலை சம்பவம் எதற்காக நடைபெற்றது இவர்களுக்கு என்ன முன் விரோதம் இருந்தது என்பது தொடர்பாக தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் இந்த இரட்டை கொலை வழக்கில் உடனடியாக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

இதையும் படிங்க: மது போதையில் தாயை கொடூரமாக தாக்கிய மகன்... பெற்ற பிள்ளையை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற தந்தை கைது...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share