தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.180 கோடி பேரம்!! திரைமறைவில் கரூர் கம்பெனி! சிக்கும் செந்தில்பாலாஜி?!
முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., ஆட்சியை கவிழ்க்க, 180 கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்பட்ட தகவல், போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைமையிலான முதல்வர் விஜய் அரசை கவிழ்க்க 180 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்ட சதி விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி போலீசார் நடத்தும் விசாரணையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், அரும்பாக்கம் திருநாவுக்கரசு (45), திருச்சி நரேஷ் (45), மேடவாக்கம் தியாகராஜன் (40) உள்ளிட்ட எட்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் ஐ.பி.டி.எஸ். உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம் செயல்படுபவர்கள் என்று கூறப்படுகிறது.
விசாரணையில், தி.மு.க.வின் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் இந்த சதியில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்துள்ளது. 'கரூர் கம்பெனி' என அழைக்கப்படும் குழுவைச் சேர்ந்த கார்த்திக் (43) மற்றும் ரமேஷ் (45) ஆகியோர் மூலம் சென்னை கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் திருநாவுக்கரசை சந்தித்து பேரம் பேசப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அடக்குமுறைகளுக்கு திமுக ஒருபோதும் அடிபணியாது..! அனிதா ராதாகிருஷ்ணன் கைது! கனிமொழி ஆவேசம்!
த.வெ.க. எம்.எல்.ஏ.க்களில் குறைந்தது 10 பேரை தி.மு.க. பக்கம் இழுத்து, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வந்து ஆட்சியை கவிழ்க்கும் திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக 180 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும், சில எம்.எல்.ஏ.க்களுடன் தொடர்பு கொள்ளப்பட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் 35 கோடி ரூபாய் ஒரே தவணையில் தருவதாக பேரம் பேசப்பட்டதாகவும், அவர் மறுத்ததால் மிரட்டப்பட்டதாகவும் போலீசார் கூறியுள்ளனர். த.வெ.க. அரசு நீண்ட நாட்கள் நீடிக்காது எனக் கூறி அவரை மூளைச்சலவை செய்ய முயற்சித்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். நீதிபதி சில திருத்தங்களைக் கோரியதால், இன்று புதிய மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: இந்தவாட்டி மிஸ் ஆகவே கூடாது! மு.க.ஸ்டாலின் மும்முரம்! இடைத்தேர்தலுக்கு தயாராகும் திமுக! நிர்வாகிகளுடன் ஆலோசனை!