பொறியியல் படிப்புக்கு குறையாத மவுசு.. இதுவரை 2.25 லட்சம் பேர் விண்ணப்பம்..!
பொறியியல் படிப்பில் சேர இதுவரை 2.25 லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
பிளஸ் 2 முடித்த பின்னர், உயர் கல்வியாக பொறியியல் படிக்கலாமா, படித்தால் வேலை கிடைக்குமா? வேறு என்ன படிக்கலாம் என்று மாணவர்களிடையே பல கேள்விகள் எழ தொடங்கும். இருப்பினும் தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. அதேசமயம், ஆண்டுதோறும் பல்வேறு பொறியியல் கல்லூரிகள் மூடப்படுவதோடு, பல கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகின்றன. இவற்றின் மத்தியில் பொறியியல் படித்தால் வேலை கிடைக்குமா என்ற அச்சம் அதிகரித்து வருகிறது.
50-க்கும் மேற்பட்ட துறைகள் கொண்ட பொறியியல் படிப்பில், ஒரு காலத்தில் மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், சிவில் ஆகியவற்றை எடுத்து படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டினர். ஆனால், கணினி துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் கடந்த 20 ஆண்டுகளில் பெருகிய நிலையில், இதனை தவிர்த்து மாணவர்கள் கணினி மற்றும் ரசாயனம், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொடர்பியல் சம்மந்தமான படிப்புகளை தேர்வு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: பாலியல் குற்றவாளிகளை காப்பாற்ற இப்படியுமா? ஸ்டாலினின் ப்ளான் இதுதான்! ஆர்.பி உதயகுமார் விளாசல்..!
பொறியியல் படிப்புக்கான வரவேற்பு மாணவ, மாணவிகளிடம் குறையவில்லை என்பதை ஒவ்வொரு ஆண்டும் நிரூபிக்கும் விதமாக, லட்சக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். பொறியியல் படிப்புக்கும், வேலை வாய்ப்புக்கும் என்றுமே மவுசு குறையாது.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் ஒற்றை சாளர முறையில் சேர கடந்த 7ம் தேதி முதல் விண்ணப்பப்பதிவு தொடங்கியது. இதுவரை 2,26,503 மாணவர்கள் போட்டி போட்டுகொண்டு பொறியியல் படிப்புகளை படிக்க விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஆட்டம் ஆரம்பம்.. அடிச்சு தூக்க போகுது மழை..! கோவை, நீலகிரிக்கு ஆரஞ்சு அலர்ட்..!