×
 

பாலியல் புகாரில் சிக்கிய வைரமுத்துவுக்கு ஞானபீட விருதா? போர்க்கொடி தூக்கும் தமிழ் எழுத்தாளர்கள்!! கண்டன அறிக்கை!

'தகுதியற்றவருக்கு விருது வழங்குவது தமிழ் இலக்கிய மரபுக்கு இழைக்கப்படும் அவமதிப்பு' என்று வைரமுத்துக்கு ஞானபீட விருது வழங்கும் முடிவை எதிர்த்து தமிழ் எழுத்தாளர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

சினிமா பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டிருப்பதை கடுமையாக எதிர்த்து தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர்கள் 230 பேர் கூட்டாக கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

எழுத்தாளர் ஜெயமோகன் உள்ளிட்ட பலர் ஏற்கெனவே இந்த முடிவை “தமிழுக்கு நேர்ந்த அவமானம்” என்று விமர்சித்த நிலையில், இப்போது 230 எழுத்தாளர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த அறிக்கையில், “ஞானபீட விருது இந்திய இலக்கியத்தின் மிக உயரிய அங்கீகாரம். இது தகுதியான படைப்பாற்றல், மானுட அறம் மற்றும் சமூக விழுமியங்களுக்கு சான்றாக இருக்க வேண்டும். ஆனால் வைரமுத்துக்கு இந்த விருது வழங்குவது தமிழ் இலக்கிய மரபுக்கும், விருதின் புகழுக்கும் இழைக்கப்படும் அவமதிப்பு” என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அடங்கவே மாட்டீயா?... நுங்கும் சீவும் கத்தியால் மருமகளின் கழுத்தை சீவிய மாமனார்... தடுக்க வந்த மகனுக்கும் வெட்டு...!

எழுத்தாளர்கள் மேலும் கூறியுள்ளதாவது: “தமிழ்ச் சமூகம் இரண்டாயிரம் ஆண்டுகால இலக்கியப் பாரம்பரியத்தைக் கொண்டது. உண்மையான இலக்கியவாதி மண்ணின் ஆன்மாவையும், பண்பாட்டு ஆழத்தையும் தன் படைப்பில் பிரதிபலிக்க வேண்டும். ஆனால் வைரமுத்துவின் எழுத்துக்கள் வெறும் வணிக நோக்கத்துடன், திரைப்பட லாபத்துக்காக உருவாக்கப்பட்ட மேலோட்டமான வார்த்தை ஜாலங்கள் மட்டுமே.”

‘மீ டூ’ இயக்கத்தின்போது வைரமுத்து மீது 17-18 பெண்கள் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக எழுப்பியுள்ளதையும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. “தார்மீகக் கறை படிந்த ஒருவருக்கு உயரிய விருது வழங்குவது நவீன சமூகத்துக்கு முரணான செயல்” என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

வைரமுத்து ஆணாதிக்கப் பார்வை கொண்டவர் என்றும், பெண்களை இழிவுபடுத்தும் விதத்தில் படைப்புகளை வெளியிட்டுள்ளதாகவும் அறிக்கை குற்றம் சாட்டுகிறது.

முன்னதாக, கேரளாவில் வைரமுத்துக்கு ஓ.என்.வி. விருது அறிவிக்கப்பட்டபோது எழுந்த எதிர்ப்பால் அந்த விருது ரத்து செய்யப்பட்டது. அதே தார்மீக அணுகுமுறையை ஞானபீடக் குழுவும் கடைப்பிடிக்க வேண்டும் என்று எழுத்தாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இறுதியாக, “இலக்கியத் தரத்தையும், சமூக நீதியையும் கருத்தில் கொண்டு வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்ட ஞானபீட விருதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: இந்திய மின் உற்பத்தி துறையில் முதலீடு செய்யுங்கள்!! உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share