×
 

உடைக்கப்பட்ட பூட்டு... உள்ளே நுழைந்த அதிகாரிகள் படை... திமுக நிர்வாகி ஏலக்காய் குடோனில் 2வது நாளாக தொடரும் சோதனை...! 

கேரளா, பெங்களூர், சென்னை என மூன்று பகுதிகளிலும் இருந்து அமலாக்கத்துறை வருமானவரித் துறையினர் மற்றும் வணிக வரித்துறை சார்ந்த அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய CRPF போலீசார் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேனி மாவட்டம் போடியில் ஏலக்காய் வர்த்தகத்தில் அரசுக்கு பலகோடிக்கணக்கில் வரி வருவாய் இழப்பு  நடைபெற்றுள்ளதாக மத்திய அரசின் வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அமலாக்கத்துறை, வணிகவரிதுறையினர்.GST புலனாய்வுத்துறை, வருமானவரித்துறையினர்  இரண்டாவது நாளாக   சோதனை.

தேனி மாவட்டம் - போடிநாயக்கனூர் நகர்மன்றத்தலைவி ராஜராஜேஸ்வரி(திமுக) இவரது கணவர் சங்கர், திமுக மாநில செயற்குழு உறுப்பினரான இவர் தற்போது போடிநாயக்கனூர்  நகராட்சியின் 29வது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார். பணப்பயிரான ஏலக்காய் வர்த்தகத்தில் பெரும் பங்கு வகிக்கும் நபரான இவரது மகன் லோகேசும் தற்போது ஏலக்காய் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், சங்கர் ஏலக்காய் வர்த்தகத்தில் அரசுக்கு பல கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், நேற்று மதியம் 4 மணி அளவில் சங்கருக்கு சொந்தமான ஏலக்காய் குடோனின் பூட்டை உடைத்து சோதனையை ஆரம்பித்த  அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை மேற்கொண்ட நிலையில் இன்று சங்கரின் மனைவியும் போடிநாயக்கனூர் நகர்மன்றத்தலைவியுமான ராஜராஜேஸ்வரியிடம்  அவரது வீட்டில் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

சங்கரும் அவரது மகன் லோகேசும் தலைமறைவாக உள்ள நிலையில், இவர்களுடன் ஏலக்காய் வர்த்தகத்தில் தொடர்புடைய தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஏலக்காய்  வர்த்தகர்களிடம்  விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். வரி ஏய்ப்பு புகார் தொடர்பான சோதனையில் சங்கர் ஆஜர் ஆகும் வரை சோதனை தொடர இருப்பதாகவும், அவருக்கு சொந்தமான வீடு கேராளாவில் உள்ள தோட்டம், அங்கு உள்ள வணிக வளாகங்களில் சல்லடை போட்டு தேடும் அதிகாரிகள் அவர் விசாரணைக்கு வரும் வரை குடோனில் தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க: மீண்டும் தலைத் தூக்கிய ஆருத்ரா விவகாரம்... 15 இடங்களில் அமலாக்கத்துறை தீவிர ரெய்டு...!

கூடுதல் தகவலாக கடந்த சிலநாட்களுக்கு  முன் விசாரணைக்கு ஆஜராகும்படி, சங்கருக்கு சம்மனை  வருமானவரித்துறை அதிகாரிகள் நேரில் அளித்த நிலையில் சங்கர் தலைமறைவாகியுள்ளது வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியள்ளதால், சங்கர் நேரில் விசாரணைக்கு ஆஜராகும் வரையில் இந்த சோதணையானது தொடர உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

நேற்று போடியில் ராஜராஜேஸ்வரியின்- கணவர் சங்கருக்கு சொந்தமான ஏலக்காய் குடோனின் பூட்டை உடைத்து, உள்ளே சென்ற கேரளா, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த அமலாக்கத்துறை மற்றும் வணிகவரித்துறையினர் வருமானவரித் துறையினர் சார்ந்த 20க்கும் மேற்பட்டஅதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

கேரளா, பெங்களூர், சென்னை என மூன்று பகுதிகளிலும் இருந்து அமலாக்கத்துறை வருமானவரித் துறையினர் மற்றும் வணிக வரித்துறை சார்ந்த அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய CRPF போலீசார் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் இருந்து 28 வாகனத்தில் அமலாக்க துறையினரும், கேரளாவில் இருந்து நான்கு வாகனங்களில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறையினரும், பெங்களூரில் இருந்து வணிகவரித்துறையினரும் முழுமையாக சங்கருக்கு சொந்தமான ஏலக்காய் குடோன், வீடு, ஏலக்காய் தோட்டம் மற்றும் அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 
 

இதையும் படிங்க: சென்னையில் காலையிலேயே அதிரடி ... 10க்கும் மேற்பட்ட இடங்களை சுத்துப்போட்ட அமலாக்கத்துறை ...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share