சென்னையில் காலையிலேயே அதிரடி ... 10க்கும் மேற்பட்ட இடங்களை சுத்துப்போட்ட அமலாக்கத்துறை ...!
சென்னையில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் இன்று காலை 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக சென்னை கோடம்பாக்கம், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கல்யாணி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலையிலேயே சோதனை மேற்கொண்டுள்ளனர். அம்பத்தூர் திருவேங்கட நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பிரகாஷ் என்பவர் வீட்டிலும் சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
சைதாப்பேட்டை தெற்குமாட வீதியில் உள்ள கலைச்செல்வன் என்பவர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். கேகே நகர் லட்சுமணசாமி சாலையில் உள்ள தங்க நகை வியாபாரி சேட் என்பவர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். 15 க்கும் மேற்பட்ட வாகனங்களில் புறப்பட்டுச் சென்ற அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனை நடத்தி வருவதாகவும், சோதனை நிறைவுற்ற பிறகு கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள் மற்றும் நகைகள் குறித்த தகவல்கள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING " மதுரை, கோவைக்கு மெட்ரோ ரயிலை கொண்டு வருவோம்" - மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால்...!
இதையும் படிங்க: விவசாயிகளே தயாரா? ... கோவை விசிட்... தமிழில் பிரதமர் மோடி கொடுத்த அசத்தல் அப்டேட்...!