முன்னாள் திமுக ஊராட்சி மன்ற தலைவர் கொலையில் அதிரடி திருப்பம்... மூன்று பேரை கொத்தாக தூக்கிய காவல்துறை...!
விருதுநகர் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது - மேலும் ஒருவருக்கு போலீசார் வலை
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வரலொட்டி ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் திருப்பதி (57). இவர் திமுகவில் காரியாபட்டி மேற்கு ஒன்றிய தொழிலாளர் அணியின் அமைப்பாளராக உள்ளார். இவர் கடந்த 10-ம் தேதி இரவு 4 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
கடந்த 10ம் தேதி இரவு விருதுநகரில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் வரலொட்டி நோக்கி காரியாபட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது வில்லிபத்திரி அருகே இவருக்கு எதிரே வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென அவரை வாகனத்திலிருந்து கீழே தள்ளினர்.
பின்னர் அந்த கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் திருப்பதியை சரமாரியாக தாக்கி வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
இந்த கொலை சம்பவம் குறித்து மல்லாங்கிணறு போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கொலை சம்பவத்திற்கு வரலொட்டி கிராமத்தைச் சார்ந்த மணிகண்டன் (எ) பாட்டில் மணி (20) என்பவருக்கும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதி என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பிளஸ் டூ மாணவி கொடூர கொலை... அவ்வளவும் அலட்சியம்..! இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்..!!
இந்த முன் விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு மணிகண்டன் அவருடைய நண்பர்களான இருளப்பன் (25) ராஜா (20) உள்ளிட்ட 4 நபர்களுடன் சேர்ந்து கடந்த 10-ம் தேதி இரவு திருப்பதி தனது இருசக்கர வாகனத்தில் விருதுநகர் வரலொட்டி சாலையில் சென்று கொண்டிருந்த போது அருவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது.
மல்லாங்கிணறு பகுதியில் பதுங்கி இருந்த மணிகண்டன், இருளப்பன், ராஜா ஆகிய மூவரை கைது செய்த காவல்துறையினர் மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை மல்லாங்கிணறு போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் வீடு புகுந்து அதி பயங்கரம்.. துண்டு துண்டாக சிதறிய உடல் பாகங்கள்... ஈரக்குலை நடுங்க வைத்த கொடூரம்..!