×
 

வெளியானது பொங்கல் பரிசு தொகுப்பு விவரம்!! ஜன.,3 முதல் உங்கள் கைகளில்! லிஸ்ட் இதோ?!

ரூ.750 மதிப்புள்ள பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 3-ந்தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி: தமிழகத்தில் திமுக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பை இன்னும் வெளியிடாத நிலையில், அண்டை மாநிலமான புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான என்டிஏ அரசு அதிரடி காட்டியுள்ளது.

 “ரூ.750 மதிப்புள்ள சூப்பர் பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜனவரி 3-ம் தேதி முதல் விநியோகம் தொடங்கும்” என்று முதல்வர் என். ரங்கசாமி அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு புதுச்சேரி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது, அதே நேரம் தமிழகத்தில் “எங்கேய்யா நம்ம பரிசு?” என்று ட்ரோல் புயலையும் கிளப்பியுள்ளது!

என்னென்ன இருக்கு இந்த ‘பம்பர்’ தொகுப்பில்?
புதுச்சேரி அரசு வெளியிட்ட பட்டியலின்படி, ஒவ்வொரு ரேஷன் கார்டு தலைவருக்கும் இலவசமாகக் கிடைக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பில்:  

இதையும் படிங்க: "வாட் ப்ரோ.. வெரி ராங் ப்ரோ" - புதுச்சேரியில் உளறிக்கொட்டிய விஜய்... 7 நிமிட பேச்சில் இத்தனை குழப்பமா??

  • உயர்தர பச்சரிசி
  • நாட்டுச் சர்க்கரை (விட சுவையான கருப்பட்டி & வெல்லம் கலந்த நாட்டுச் சர்க்கரை
  • பாசிப்பருப்பு
  • தரமான நெய்
  • சூரியகாந்தி எண்ணெய் பாக்கெட்

இவை அனைத்தும் சேர்த்து சந்தை மதிப்பு ரூ.750-ஐத் தொடும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தசாமி நகர், முதலியார்பேட்டை, ரெட்டியார்பாளையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஜனவரி 3 முதல் 12-ம் தேதி வரை ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ‘ஸ்வீட்’ டைமிங்!

புதுச்சேரியில் 2026-ல் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதற்கு முன்பாகவே ரங்கசாமி அரசு இந்த ‘பொங்கல் பம்பர்’ அறிவிப்பை வெளியிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 “தமிழகத்தில் ஸ்டாலின் அரசு இன்னும் பொங்கல் பரிசு பற்றி பேசவே இல்லை… ஆனால் புதுச்சேரியில் ரங்கசாமி சார் ஏற்கனவே ரெடியாக்கிட்டாரு!” என்று புதுச்சேரி மக்கள் கொண்டாட்டத்தில் மூழ்கினர். சமூக வலைதளங்களில் #PongalGift750, #RangasamyMass போன்ற ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகி வருகின்றன.

கடந்த ஆண்டு புதுச்சேரி அரசு ரூ.500 மதிப்பிலான பரிசுத் தொகுப்பு கொடுத்தது. இந்த முறை ரூ.250 அதிகரித்து, நாட்டுச் சர்க்கரை, நெய் போன்ற பிரீமியம் பொருட்களையும் சேர்த்திருப்பது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

தமிழகத்தில் இதைப் பார்த்துவிட்டு “எங்கேய்யா நம்ம பொங்கல் பரிசு?” என்று கேள்வி எழுப்பும் குரல்களும் எழுந்துள்ளன. 2026 தேர்தல் மோடியில், புதுச்சேரி மாடலா? தமிழக மாடலா? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க்க வேண்டும். ஆனால் இப்போதைக்கு புதுச்சேரி மக்கள் மட்டும் “பொங்கலோ பொங்கல்” என்று கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளனர்!

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய அஞ்சலைக்கு 2 வருஷம் ஜெயில்... என்ன விஷயம் தெரியுமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share