எண்ணூரில் சோகம்.. திடீரென சரிந்து விழுந்த சாரம்.. 9 தொழிலாளர்கள் பரிதாப பலி..!!
எண்ணூர் அனல் மின் நிலைய புதிய அலகு கட்டுமானத்தில் ராட்சத வளைவு அமைக்கும் பணியின் போது, சாரம் சரிந்து விழுந்ததில் 9 புலம்பெயர் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான கட்டுமானப் பணிகள் சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், நூற்றுக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் எண்ணூரில் தங்கி இந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று வழக்கமாக பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது முகப்பில் அமைக்கப்பட்ட சாரம் திடீரென சரிந்து விழுந்தது. இதில் ராட்சத வளைவு அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 9 வட மாநிலத் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் சக தொழிலாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING நெஞ்சே பதறுதே... குவியலாய் சடலங்கள்... பலி எண்ணிக்கை 40 ஆக அதிகரிப்பு...!
சாரம் விழுந்ததில் மேலும் பலருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவர்கள் சென்னை ராயபுரம் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கேரளாவை மிரட்டும் அமீபா மூளைக்காய்ச்சல்! பல உயிர்களைக் குடித்த வைரஸ்...