உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... அடுத்த 24 மணி நேரத்தில் நடக்கப்போகும் தரமான சம்பவம்...!
மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மத்திய வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும். அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு கடலோர ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா நோக்கி நகரக்கூடும்.
இதையும் படிங்க: #50 YEARS OF RAJINIKANTH! எடப்பாடி பழனிச்சாமி ராஜிகாந்துக்கு வாழ்த்து மழை...
தமிழகத்தில் வடக்கு மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்று இடி மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இப்பகுதிகளில் ஆக., 18 வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது. நீலகிரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில், சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், சில இடங்களில், இடி மின்னலுடன், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: பாஜகவுக்கு அடுத்த தலைவலி! அடுத்த லிஸ்ட் ரெடி... FIRE MODE-ல் காங்கிரஸ்