×
 

அடுத்தடுத்து அதிரடி .. சேகர் பாபுவை தொடர்ந்து ஆ. ராசா மீது பாய்ந்த வழக்கு...!

திமுக MP ஆ. ராசா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசியல் களத்தில் மீண்டும் ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் ஆற்றிய பேச்சு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியதை அடுத்து, அக்கட்சியினர் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். அந்த போராட்டங்களின் போது முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா ஆகியோர் முதல்வர் விஜய் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

இதையடுத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.சட்டப்பேரவையில் முதல்வர் விஜய், திமுகவின் முந்தைய ஆட்சிக்கால ஊழல் குற்றச்சாட்டுகள், சர்க்காரியா கமிஷன் அறிக்கை உள்ளிட்ட விவகாரங்களை சுட்டிக்காட்டி பேசினார். அவசரநிலை காலத்தில் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவத்தையும் குறிப்பிட்டார். இந்தப் பேச்சு திமுகவினரை ஆத்திரமடையச் செய்தது. முதல்வரின் சில உடல் சைகைகள் ஸ்டாலினின் அரசியல் தியாகத்தை அவமதிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து செப்டம்பர் 12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என திமுக தலைமை அறிவித்தது.அதன்படி சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

சைதாப்பேட்டையில் கலைஞர் வளைவு அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அதேபோல் சேகர்பாபு தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது. இந்த மேடைகளில் முதல்வர் விஜய் மீது கடும் தாக்குதல் தொடுக்கப்பட்டது.சேகர்பாபு பேசும்போது, கரூர் சம்பவத்தை நினைவுகூர்ந்தார். அங்கு பலர் உயிரிழந்ததை அடுத்து விமான நிலையத்தில் ஓடி ஒளிந்ததாக முதல்வரை விமர்சித்தார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவருக்கு பதில் சொல்ல வாய்ப்பே கொடுக்காமல் பேசி முடித்ததாகவும், தெம்பற்ற, திராணியற்ற முதல்வர் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவுக்கு இறங்கிய பேரிடி... உச்சக்கட்ட அதிர்ச்சியில் திமுக...!

ஒரு சொல்லைப் பயன்படுத்தி கடுமையாக சாடினார். திமுக அடிபட்ட புலியாக களத்தில் நிற்பதாகவும், ஒருநாள் பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். மிசா சட்டம் குறித்து பேசத் தகுதியற்றவர் என்றும் குறிப்பிட்டார்.ஆ.ராசாவும் தனது பேச்சில் முதல்வரின் கருத்துக்களை கடுமையாக சாடினார். சட்டப்பேரவையின் மரியாதையை குலைக்கும் வகையில் பேசப்பட்டதாகவும், அரசியல் உரையாடல் இதுவரை இல்லாத அளவுக்கு தாழ்ந்த நிலைக்குச் சென்றதாகவும் குற்றம் சாட்டினார். சட்ட அமைச்சர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் மீதும் விமர்சனங்களை முன்வைத்தார். இந்தப் பேச்சுகள் சமூக ஊடகங்களில் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தின.இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் கும்கிடிபூண்டி எம்.எல்.ஏ. விஜயகுமார், கும்கிடிபூண்டி டி.எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார்.

ஆ.ராசா, சேகர்பாபு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் முதல்வர் விஜய் மற்றும் சட்ட அமைச்சர் நிர்மல்குமார் மீது அவதூறான, சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததாக அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாகவும், சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

 

இதையும் படிங்க: தாவியதும் சீட் தருவது அப்பட்டமான குதிரை பேரம்: தாராபுரத்தில் திமுக சாமிநாதன் காட்டம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share