தைலாபுரம் தோட்டத்தில் இம்பார்டண்ட் மீட்டிங்.. வன்னியர் சங்க கூட்டத்தில் எடுக்கப்பட்ட அதிமுக்கிய முடிவு..!
விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற வன்னியர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் வன்னியர் சங்க தலைவர் பு. த.அருள்மொழி மற்றும் மாநில செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே அதிகார யுத்தம் நடந்து வருகிறது. கட்சியின் நிறுவனரும் நானே, தலைவரும் நானே என்று ஏற்கனவே ராமதாஸ் அறிவித்துவிட்டார். இதனிடையே, சமீபத்தில் மாமல்லபுரத்தில் நடந்த சித்திரை முழு நிலவு மாநாட்டில் ராமதாஸ், அன்புமணி இடையேயான மோதல் போக்கு பட்டவர்த்தனமாக தெரிந்தது. இந்நிலையில், பா.ம.க.வின் ஆணிவேரான வன்னியர் சங்கத்தின் ஆதரவு யாருக்கு? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வன்னியர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் இன்று நடந்தது.
வன்னியர் சங்க கூட்டம் தைலாபுரம் இல்லத்தில் இன்று நடைபெறுவதாக வன்னியர் சங்க தலைவர் பு.த. அருள் மொழி அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து வன்னியர் சங்க நிர்வாகிகள் கூட்டம் தைலாபுரத்தில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் வன்னியர் சங்க தலைவர் பு. த.அருள்மொழி மாநில செயலாளர்கள் 5 பேர் மற்றும் மாவட்ட தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். கூட்டத்தில் பாமக கெளரவ தலைவர் ஜி.கே மணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், மாநில தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: குடும்பத்துக்குள்ளயே வெட்டு, குத்து நடக்குது..! இதுல படுத்துக்கிட்டே எப்படி ஜெயிப்பீங்க ; சேகர்பாபு விமர்சனம்..!
கூட்டத்திற்கு முன்பாக பேட்டியளித்த கெளரவ தலைவர் ஜி.கே மணி மூன்று நாட்களாக அன்புமணி ராமதாசுக்கும், ராமதாசுக்கு இருவருக்குமான பேச்சுவார்த்தை சுமூகமான நடைபெறுவதாகவும், விரைவில் தீர்வு எட்டபடுமென நம்பிக்கை தெரிவித்தார். பாமக நிறுவனர் ராமதாசுக்கு காலம் முடிந்த பிறகு அன்புமணி ராமதாஸுக்காவும்தான் தான் உழைப்பதாகவும், அன்புமணி ராமதாசுக்கு வன்னியர் சங்க கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். இந்த கூட்டத்திற்கு வருவார் என எதிர்பார்க்கிறோம் வந்தால் நல்லது. வரவில்லை என்றாலும் கூட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.
மேலும் அன்புமணியை நீக்குவதற்காக நிர்வாகிகளிடம் கையெழுத்து வாங்கியதாக தகவல் வெளியாகியது அது தவறான தகவல் அப்படி எதுவுமில்லை என ஜி கே மணி திட்டவட்டமாக கூறினார். இதனை தொடர்ந்து பேசிய வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி பாமகவில் ஏற்பட்டுள்ள சலசலப்பு விரைவில் சீராகும் என்று தெரிவித்தார். வன்னியர் சங்க கூட்டத்திற்கு சமூக வலைதளங்கள் மூலமாக அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அன்புமணி ராமதாசுக்கும் அழைப்பு சமூக வலைதளமான வாட்சப் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அன்புமணி ராமதாஸ் தனக்கு வாட்சப் மூலமாக தான் தகவல் அளிப்பார் அதே போன்று அவருக்கும் வாட்சப் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது என தெரிவித்தார். பாமக கட்சிக்குள் இருக்கும் சலசலப்பு விரைவில் சீராகும், இன்று நடைபெறும் கூட்டத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த போராட்டம் நடத்த முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் அதற்கான தேதியும் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும், தமிழக அரசை சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த நிர்பந்திக்கும் வகையில் கூட்டம் நடைபெறுவதாக வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: டாஸ்மாக் செயல்பாட்டில் தரகர்கள் தலையீடு.. ED போதாது.. சிபிஐ வேண்டும்.. சீறும் அன்புமணி..!